பக்கம்:கலியன் குரல்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 அருளிச் செயல்கள் இலக்கிய இன்பம் அவற்றிற்கு மெருகூட்டுகின்றன. இவற்றிற்கும் பிற ஆழ்வார்களின் பாசுரங்களை நாடவேண்டியுள்ளது. ஆழி மழைக்கண்ணா: ஒன்று நீ கைகரவேல் ஆழியில் புக்கு முகந்துகொ டார்த் தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப் பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய்8ே ஆயர்பாடிச் சிறுமிகள் மழை தெய்வத்தை வேண்டுவதாக ஆண்டாள் பாடிய பாசுரம் இது. ஆழியில் புகுதல், ஏறுதல், சார்ங் கம் உதைத்தல் - இவை இயக்கப்புலப் படிமங்கள்;. ஆழிமழைக் கண்ணன், ஊழி முதல்வன் போல் மெய்கறுத்தல், ஆழிபோல் மின்னுதல் இவை கட்புலப் படிமங்கள்: ஆர்த்தல், அதிர்தல், சரமழை பெய்தல் - இவை செவிப்புலப் படிமங்கள். இம்மூவகைப் படிவங்களின் கலவை பாட்டதுபவத்தை மிகுவிக்கின்றது. இத்தகைய கலவைப் புலப் படிமத்தை இன்னொரு பாசுரத் திலும் கண்டு மகிழலாம். மாரி மழைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்த வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதரி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணா,உன் கோயில் நின்று இங்ங்னே போந்தருளி 7 கோபியர் தங்கள் முன் கண்ணன் எவ்வாறு எழுந்தருளிக் குறை முடிக்க வேண்டும் என்பதைத் தெரிவிக்கும் பாசுரம் இது. மலை முழைஞ்சில் உறங்கும் சிங்கம், தீவிழித்தல், பூவைப்பூ வண்ணன், 97 .ഒ9.23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/124&oldid=775515" இலிருந்து மீள்விக்கப்பட்டது