பக்கம்:கலியன் குரல்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 அருளிச் செயல்கள் - இலக்கிய இன்பம் அவர்கள் இயற்கையில் இறைவனையே கானும் பேறு பெற்ற வர்களாகின்றனர். இவ்வாறு பெரு மூளையில் பதிவாகி இருக்கும் அநுபவம் அச்சு வடிவிலுள்ள கவிதைகளைப் படிக்கும்போது நினைவாற் றலின் காரணமாகத் துண்டல்களாக (ideational level} மாறுகின்றன. அவை மூளையிலுள்ள பூத்தண்டு (Thalamus) மேற்பூத்தண்டு (Hypothalamus) என்ற பகுதிகளின் மூலமாகப் புலன்களை அடையும் போது மூளையில் அற்புதமாக அமைந் திருக்கும் நரம்பு அமைப்புகளைத் தாண்ட அந்நரம்புகளின் இயக்கத்தால் மாங்காய்ச் சுரப்பிகள் (Adrenal glands ! போன்ற நாளமிலாச்சு ரப்பிகளின் (Ductiess glands) சாறுகளை ஊறச் செய்து குருதியோட்டத்தை மிகுவிக்கின்றன. உடலும் கிளர்ச்சி அடைகின்றது. அப்போது கவிதைகளில் வரும் படி மங்களைப் (Imagery) புலன்கள் மீட்கும் மனத்தில் தோன்றச் செய்கின்றன. மனம் அக்காட்சிகளை அநுபவித்து மகிழ்கின்றது. இத்தகைய முருகுணர்ச்சி ஆழ்வார் பாசுரங்களில் பக்தியுணர்ச் சியாகப் பரிணமிக்கின்றது, இந்தப் பாசுரங்களைப் பயிலுங் கால் அதே உணர்ச்சியை நாம் பயிற்சியால் பெற முடிகின்றது. ஆழ்வார்கள் அநுபவித்த பக்கி உணர்ச்சி அவர்தம் பாசுரங்களில் தேக்கி வைக்கப் பெற்றுள்ளது. அவர்தம் பாசுரங்களை நாம் பயிலுங்கால் அவற்றிலுள்ள சுவைகளை-பக்தி உணர்வுகளைநம்மனம் அநுபவித்து மகிழ்கின்றது. பாசுரங்களும் மம்மர் அறுக்கும் மருந்தாக நமக்குக் களிப்பூட்ட, நாம் பிரம்மர்துபவம் (Biss of Brahman) பெற்ற நிலையை அடைகின்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/126&oldid=775519" இலிருந்து மீள்விக்கப்பட்டது