பக்கம்:கலியன் குரல்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 அருளி செயல்கள் - தத்துவக் கருத்து இது கண்முதலிய இந்திரியங்கட்குத் தோற்றாது; மனத் தாலும் இதை நினைக்க முடியாது. இதனைப்பகுதி களாகவும் பிரிக்கமுடியாது; அவயவமும் அற்றது. வளர்தல், பருத்தல், குறைதல் முதலி வேறுபாடுகள் இதற்கு இல்லை. அறிவு மயமாக இருக்கும் இந்த ஆன்மா அறிவுக்கு இருப்பிடமா னது. இந்த அறிவு தர்ம பூத ஞானம் என்று வழங்கப்பெறும். இதனால் ஆன்மா தர்மி பூத ஞானம் என்ற வேறொரு பெயரா றும் வழங்கப் பெறும். இந்தச் சீவான்மா தனக்கு எப்பொழுதும் தோன்றிக் கொண்டேயிருக்கும், தன்னை நான் என்று அறியும் பொழுது தர்ம பூத ஞானம் உதவவேண்டும் என்பதில்லை. ஆனால் சீவான்மா தன்னைத் தவிர வேறு எந்தப் பொருளையும் தன் தர்ம பூத ஞானத்தால் மட்டிலுமே அறிய முடியும், தன் சொரூபத்தைத் தர்ம பூத ஞானத்தைக் கொண்டும் அறியலாம். ஆன்மா இறைவன் ஏவியபடி நடப்பது; அவனால் தரிக்கப் பெற்று, அவனுக்கு அடிமையாகவே இருப்பது. சித்தின் வகை: சீவான்மாக்கள் எண்ணற்றவர். இவர்களின் தொகுதி பத்தர் (தளைப்பட்டிருப்பவர்), முக்தர், கித்தியர் என்னும் வேற்றுமையால் மூவகைப் பட்டிருக்கும். இவர்களுள் பத்தர் என்பவர் மூலமும் நடுவும் ஈறும் இல்லதோர்மும்மைத் தா கால்மும் கணக்கும் நீத்த காரணனின் மாயையால் மறைக்கப்பெற்ற சொரூபத்தையுடையவர்கள்; அநாதி அஞ்ஞா னத்தால் தேடிய புண்ணிய பாவங்களால் (வினையினால்): சூழப் பெற்றவர்கள்; இவர்கள் அவரவர்களின் வினைக்குத்தக் கவாறு மாறிமாறித் தேவ, மனித விலங்கு, தாவர வடிவங் 2. மூன்று வகைப்படும். இப்பிறப்பிற்கு முன்னைய பிறப்புகளில் செய்தவினைகளுள் இப்பிறப்பில் அநுபவித்தற்கென்று அளந்து கொள்ளப் பெற்ற வினைத் தொகுதி பிராத்தம் (நுகர்வினை) என்ப்படும், எஞ்சிய வினைத் தொகுதி சஞ்சிதம் வினை) எனப்படும்; இப்பிறப்பில் செய்யப் பெறும் வி தொகுதி ஆகரமியம் (எதிர்வின்ை) என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/130&oldid=775528" இலிருந்து மீள்விக்கப்பட்டது