பக்கம்:கலியன் குரல்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131 அருளிச் செயல்கள்-தத்துவக் கருத்து இவ்வுலகத்தினைப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய வற்றின் காரணபூதன். பூவளர் உந்திதன்னுள் புவனம் படைத்து உண்டு, உமிழ்ந்த தேவர்கள் நாயகன்' உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்திவேறாய் உலகுய்ய நின்றவன்' என்று பேசுவர் திருமங்கையாழ்வார். இதனை நம்மாழ்வாரும், இவையும் அவையும் உவையும் - இவரும் அவரும் உவரும் எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும் அவையுள் தனிமுதல் எம்மான்' என்று போற்றியுரைப்பர். அழிப்பொடு அழில்பவன் தானே' என்றும், காக்கும் இயல்பினன் கன்னபெருமான்’ என்றும் மேலும் பேசுவர். சிறார் வீடு கட்டி அழிக்குமாப்போலே இம்முத் தொழில்களும் இவனுக்கு தன் இச்சையாலே உண்டாகும் விளையாட்டேயாகும். இதனை நம்மாழ்வார், துன்பமும் இன்பமும் ஆகிய . செய்வினையாய் உலகங்களுமாய் இன்பமில் வெந்நர காகி இனியவான் சுவர்க்கங்களுமாய் மன்பல் உயிர்களும் ஆகி பலபலமாய மயக்குகளால் இன்புறும் விளையாட் டுடையான்." என்று குறிப்பிடுவர். இதனையே கம்பநாடன், 18. ਫਯ। ਸ੍ਤ 19. ഒു. 2. 5: 3 20. திருவாய் 1. 9: 1 21. டிெ 1, 9: 8 22, 6, 2. 2: 9 23, 6షిఫ్ట్ 3.0 :7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/138&oldid=775545" இலிருந்து மீள்விக்கப்பட்டது