பக்கம்:கலியன் குரல்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#35 அருளிச் செயல்கள்-தத்துவக் கருத்து இருக்கும் நிலை முதற்காரண நிலையாகும். பருப்பொருளாக உள்ள சித்து அசித்துகளில் இறைவன் அந்தர்யாமியாக உள்ள நிலையே காரிய நிலையாகும். அதனால் இறைவன் முதற்கான ணமாகவுள்ள நிலையிலும், காரியமாகவுள்ள நிலையிலும் சிறிதும் வேறுபடுவதில்லை. இதனால் ஈசுவரன் விகாரமற்றவன்-நிர் விகரான்-என்று சொல்லுவதில் தவறில்லை. இக்கருத்தை ஆழ்வார் பாசுரத்தில் வித்தாய் முதலிற் சிதையாமே (திருவாய் 1. 5: 2) என்ற தொடர் அழகுடன் விளக்குவதைக் கண்டு தெளியல்ாம். உலகத்துப் பொருள்கள் போலன்றி இறைவன் தன் நிலையில் சிறிதும் சிதைவின்றி இருந்து கொண்டே எல்லாப் பொருள்கட்கும் வித்தாக உள்ளனன் (முதற்காரண்மா கின்றான்) என்பது கருத்தாகும். இங்ங்னம் இருத்தல் அவனுடைய ஆச்சரிய சக்தியாகும். இதனையே திவ்விய கவி பிள்ளைப் பெருமாள் அய்யங்கார், சின்னூல் பலபலவாயால் இழைத்துக் சிலம்பி பின்னும் அந்நூல் அருந்தி விடுவதுபோல் அரங்கர் அண்டம் பன்னுாறு கோடி படைத்துஅவை யாவும் பழம்படியே மன்னூழி தன்னில் விழுங்குவர்போத மனம் மகிழ்ந்தேே என்று மிக அழகான உவமம் கலந்த பாடலால் விளக்குவர். சிறிய சிலந்திப்பூச்சி தன்னிடத்திலிருந்து நூலை உண்டாக்கிப் பின் அதனை விழுங்குகின்றது. நூல் உண்டாவதாற்கு முதற் காரணமாகவுள்ள அப்பூச்சி தன் நிலையில் அழிவதில்லை. ஒருசிறிய சிலந்திக்கு இச்செயல் கூடுமேல், தன் நிலையில் சிதைவின்றித் தான் உலகிற்கு முதற்காரணமாதல் எல்லாம் வல்ல இறைவனுக்கு அரியதாகுமோ? 31. தத்துவதி - சுவரப்-26 32. திருவரங்க மாலை-18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/142&oldid=775554" இலிருந்து மீள்விக்கப்பட்டது