பக்கம்:கலியன் குரல்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#37 அருளிச் செயல்கள்-தத்துவக் கருத்து கண்கள் சிவந்து பெரியவாய், வாயும் சிவந்து கனிந்துள்ளே வெண்பல் இலகுசுடர், இலகு விலகு மகர குண்டலத்தன், கொண்டல் வண்ணன், சுடர்முடியன், நான்கு தோளன், குனிசார்ங்கன் ஒன்சங்கு கதைவாள் ஆழியான் ஒருவன்: என்ற பாசுரப் பகுதியில் இத்திரு மேனி காட்டப்பெறுகின்றது. இந்த உருவம் ஈடும் எடுப்பும் அற்ற பேரொளியினை உடையது; பேரழகு வாய்ந்து கண்டாரை ஈர்ப்பது, "பயிலும் சுடர்ஒளி மூர்த்தி, பங்கயக் கண்ணன்', 'மாசறுசோதி என் செய்யவாய் மணிக் குன்றம்' என்று இவ்வுருவத்தின் அழகில் நெஞ்சைப் பறிகொடுத்த ஆழ்வார்களின் கூற்றுகளைப் பாசுரங்களெங்கும் காணலாம். இந்த உருவத்துடன் பெரிய பிராட்டியார், பூமிப், பிராட்டியார், நீளாதேவி ஆகியோருக்கு நாயகனாக இருப்பவன். இதனை, - இன்துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கு இன்பன் நல்புவிதனக் கிை றவன் தன்துணை ஆயர் பாவைநப் பின்னை தனக்கிறைஸ் என்ற பரகாலரின் வாக்கால் அறியலாம். இறைவனின் ஐந்து நிலைகள்: இறைவனுடைய திவ்விய மங்கள உருவம் பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என ஐந்து நிலைகளில் இருக்கும். பரத்துவம் என்பது, காலம் த்ட்ைபாடாததும் ஆன்த்தம் அளவிறந்து ஒப்பற்றதாயும் உள்ள நித்திய விபூதியில் (வைகுந்தத்தில்) இருக்கும் பரவாசுதேவனின் 36. திருவாய் 8.8:1 37. ஷை 3.7:1. 38. ഒു. 5.3:1 39. திரு, 2.3:3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/144&oldid=775558" இலிருந்து மீள்விக்கப்பட்டது