பக்கம்:கலியன் குரல்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#39 அருளிச் செயல்கள்-தத்துவக் கருத்து உருவை அங்கு வைத்து. இங்குப் பிறந்த வையாதலின், பிறப்பு இறப்பு அற்றவனான இறைவனது தன்மைகளைக் கொண்டவை. இந்த அவதாரங்கள் யாவும் ஆழ்வார்களின் பாசுரங்களில் குறிப் பிடப் பெறுகின்றன. ஒரு திருப்பதிகத்தில் திருமங்கையாழ் வார் அவதாரங்களில் ஈடுபட்டுப் பேசுவதைக் காண முடிகின்றது. இதில் ஒன்று: துணை நிலை மற்றெமக்கு ஓர்உ ைதென்றிராது தொழுமின்கள், தொண்டர் தொலைய உணமுலை முன்கொடுத்த உரவோனது ஆவி உகஉண்டு, வெண்ணெய் மருவி, பணைமுலை ஆயர் மாதர் உரலோடு கட்ட, அதனோடும் ஓடி, அடல்சேர் இணைமருது இற்றுவீழ நடைகற்ற தெற்றல் வினைப்பற் றறுக்கும் விதியே.ே இது கிருஷ்ணாவதாரத்தில் ஆழ்வார் ஆழங்காழ்ப் பட்ட தைக் காட்டுவது. மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமன - திரிவிக்கிரமன், பரசுராமன், இராமன், ஹம்ஸ்ம் - அவ தாரங்களைக் கூறும் பாசுரங்கள் இப்பதிகத்தில் உள்ளன. திரு மங்கையாழ்வார் அவதாரங்களில் ஈடுபட்டதைப் பல்வேறு இடங்களிலும் காணலாம். பற்றலர் வியக் கோல்கையில் கொண்டு பார்த்தன்தன் தேர்முன் நின் றானை சிற்றவை பணியால் முடிதுறந் தானை திருவல்லிக் சேணிக்கண் டேனே" இதில் அர்ச்சாவதாரத்தில் ஈடுபட்ட நிலையில் கிருஷ்ணாவதாரம், இராமாவதாரம் இவற்றில் ஈடுபடுகின்றதைக் காண்கின்றோம். பெரும்பாலும் இராமாவதாரத்திலும் கிருஷ்ணாவதாரத்திலும் அதிகமாகவும், வாமனம், நரசிம்மம், வராகம் முதலியவை அவற். றுக்கு அடுத்துக் குறைவாகவும் குறிப்பிடப்பெற்றுள்ளன. முன் 41 பெரி. திரு. 11. 4 42. டிை. 11. 4, 9 43 டிை. 2, 3:1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/146&oldid=775565" இலிருந்து மீள்விக்கப்பட்டது