பக்கம்:கலியன் குரல்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్ష அருளிச் செயல்கள்-தத்துவக் கருத்து சநநத பணணி நீராட்டம், தளிகை, இருப்பு முதலிய எல்லாச் செயல்களையும் உடையவனாகக் கொண்டு திவ்விய தேசங் களிலும் அன்பர்களின் திருமாளிகைகளிலும் எழுந்தருளியிருக்கும் நிலை இது. உலகியலில் மண்டியிருப்போருக்குத் தன்பக்கம்ருசி உண்டாக்குதலும், குசிபிறந்தபிறகு தன்னைத் துதிப்பவர்களு டைய கண்ணுக்கும் நெஞ்சுக்கும் இனிதாம்படி போக்கியத்திற்கு இடிமாயிருத்தலும், தன்னை உபாயமாகப்பற்றும் அளவில் எல்லா உலகினரும் உபாயமாகப் பற்றுதற்குத் தகுதியாயிருத் தலும், பரமபதத்தில்போய் அநுபவிக்க வேண்டாமல், அண்டர் கோன்அணி அரங்கன்என் அமுதினைக் கண்ட கண்கள்,மற் றொன்றினைக் கானாவே. என்று திருப்பாணாழ்வார் அநுபவித்தவாறு அநுபவிக்கத்தக்க தாக இருத்தலும் இந்த அர்ச்சாவதாரத்தில் முற்றுப் பெற்றிருக்கும். எல்லா ஆழ்வார்களும் இந்த அர்ச்சாவதாரத்தில்தான் அதிக மாக ஈடுபட்டுப் பேசுவர். சுருங்கக் கூறினால் நாலாயிரத்தின் பாசுரங்கள் யாவும் இந்த அவதாரத்தைப்பற்றியனவே யாகும். பிள்ளை உலக ஆசிரியரின் விளக்கம்: மேற்குறிப்பிட்ட இறை வனின் ஐந்து நிலைகளையும் உவமைகள் மூலம் அழகாக விளக்குவர் பிள்ளை உலக ஆசிரியர். "பூகதஜலம்போலே அந்தர்யாமித்துவம்; ஆவான ஜலம் போலே பாத்துவம்; பாற்கடல்போலே வியூகம்; பெருக்காறு போலே விபவம் ; அதிலே தேங்கின மடுக்கள்போலே அர்ச்சாவதாரம்." (பூகதம் - பூமிக்குள்ளே இருக்கின்றன; ஆவணம்- மடிக் கொண்டிருப்பது, 46. அமலனாதிபிரான் 10 47. ரீவசன. பூஷ், 42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/148&oldid=775569" இலிருந்து மீள்விக்கப்பட்டது