பக்கம்:கலியன் குரல்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியன் குரல் சாகப்பேசி அநுபவித்தல். இவற்றைத் தனித்தனியே காண்போம், தரமான தன்மையில்: இதனைப் பல்வேறு விதங்கனில் அநுபவித் பதைப் பாசுரங்களைப் பயிலுங்கால் அறியலாம். இதனை நிரலே விளக்க முயல்வேன். திவ்வியதேச அதுபவம்: திருமணங் கொல்லையில் எம் பெருமானால் திருமந்திர உபதேசம் பெற்ற திருமங்கையாழ்வார் திவ்வியதேசங்களைச் சேவிக்கும் நோக்கத்துடன் நாராயணன் நரனுக்கு உபதேசம் செய்த இடமாகிய வதரிக்கு முதலில் சென்றதை சென்ற சொற்பொழிவில் குறிப்பிட்டதை ஈண்டு நினைவுகூசவேண்டுகின்றேன். திவ்விய தேசங்களில் எழுந் தருளியிருக்கும் எம்பெருமான்கள் யாவரும் அர்ச்சாவதார மூர்த்திகள் ஆவார்; விபவாவதார மூர்த்திகளும் அர்ச்சை வடிவில்தான் எழுந்தருளியுள்ளனர். செளலப்பியத்திற்கு எல்லை நிலம் அர்ச்சாவதாரமாதலால் எல்லா ஆழ்வார்களுமே அர்ச்சாவதாரத்தையே அநுபவிக்கிறனர். திருமங்கையாழ்வார் அர்ச்சாவதாரத்தை அநுபவத்தில் பல திலைகளைக் காண்கின்றோம். பிறருக்குஉபதேசம்: தான் பெற்றி அர்ச்சாறுபவல்தை இவ் வையகமும் பெறவேண்டும் என்று எண்ணிய பரந்த நோக் குடைய இந்த ஆழ்வார் பிறரையும் அந்தத் திருத்தலங்கட்குப் போகுமாறு ஆற்றுப்படுத்துகின்றார். மூவாயிர நான்மறை யாளர் நாளும் முறையால் வணங்க அணங்காய சோதி தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே 4ே என்கின்றார் ஆழ்வார். குலசேகரப் பெருமாளும், தில்லைநகர் திருச்சித்ர கூடந் தன்னுள் அந்தணர்கள் ஒருமூவா யிரவர். ஏத்த 53. முமுட்சு-139 54. பெரி. திரு. 3. 2: 8,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/151&oldid=775576" இலிருந்து மீள்விக்கப்பட்டது