பக்கம்:கலியன் குரல்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியனின் வாழ்வும் வழியும் SAASAASAASAASAAASMMAAASAAAAASA SSASAS SSAS SSAS SSAS SSMMSAS A SAS SJS S SSAS SSAS SSAS SSASAMMA SAMAMMMS சமுசாரிகள் பகவானுக்கு அடிமைப் பட்டிருத்தலையே இயல் பாகப் பெற்றவர்கள் என்று சாத்திரங்கள் கூறும். இது சேஷப்பட்டிருத்தல்' என்று சொல்லப்படும். இந்த இயல்பை, இவர்தம் இந்த நிலையை, எப்படியோ இவர்கள் மறந்து விடு கின்றனர். ஒருகாரணமும் இன்றியே ஆட்கொள்பவனாகிய பகவா னுடைய தன்மையையும் மறந்து விடுகின்றனர். பகவானுடைய இந்தத்தன்மையினால் அவனைச் சாத்திரங்கள் கிரூபாதிக சேஷி” என்று குறிப்பிடும். திருபாதிக ஒருகாரணமுமின்றி, சேவி-தலைவன்; சேஷன்-அடிமை. இங்கனம் மறந்ததனால் எம்பெருமானுக்குத் தாங்கள் ஆற்ற வேண்டிய கடமையாகிய கைங்கரியத்தை (அடிமைத் தொழிலை) இழந்தனர். இந்தக் கைங்கரியத்தைச் சாத்திரம் புருஷார்த்தம்' என்று குறிப்பிடும். புருஷன்- ஆன்மா, அர்த்தம் - பொருள்; ஆன்மா قيfفيكس لإنتا வேண்டிய பொருள்; அதாவது கைங்கரியம். ஈசுவரனுடைய தொண்டிற்கெனவே தோன்றிய நாம் எம்பெருமானுக்குச் செய்ய வேண்டிய கைங்கரியத்தை இழந்து விட்டோமே!’ என்ற மனவருத்தம் சிறிது மின்றியே சமுசாரப் பெருங்கடலில் விழுந்து பல்வேறு துன்பங்களால் உழன்று கொண்டிருந்தனர். இக்கூறிய துன்பங்கள் ஆதியாத்மிகம்’, ஆதிபெளதிகம் ஆதிதைவிகம்: என்று மூன்று வகையாகப் பிரித்துப் பேசப் பெறும். ஆதியாத்மிகம் என்பது, தன் உடலையும் மனத்தையும் பற்றிவரும் துன்பங்கள் 10. சேஷம்-அடிம்ை. 11. கிங்கரன். வேலையாள் (Servant); அவன் செய்யும் தொழில் கைங்கரியம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/16&oldid=775591" இலிருந்து மீள்விக்கப்பட்டது