பக்கம்:கலியன் குரல்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

lă கலியனின் வாழ்வும் வழியும் என்ற கவலை கொள்ளுகின்றான். எல்லா உயிர்களோடும் இரட்சக-இரட்சிய சம்பந்தம். உடைய எம்பெருமான் எப்படி வாளா இருக்க முடியும்? சேதநர்கள் தங்களை அறிந்து கொள்ளவும், பகவானாகிய தன்னை அறிந்து கொள்ளவும் வேண்டிய அறிவினை நல்க வழி வகுக்க எண்ணுகின்றான். இந்த அறிவைப் பெற்றால் சேதநர்கள் தானாகிய (பகவானா கிய) ஏமப் புணையைக் கொண்டு தங்கள் பிறவியாகிய பெருங் கடலைக் கடந்து வீடுபேறு என்னும் மறு கரையை அடைய முடியும் என்று திருவுள்ளங் கொள்ளுகின்றான். தானே சீட னாகவும் ஆசாரியனாகவும் வடிவங்கள் கொண்டு பதரிகாச்சிர மத்தில் 5 அனாதியானதும், அர்த்த பஞ்சகத்தைச் சுருக்கமாகத் தெரிவிப்பதுமான திருமந்திரத்தை-அதாவது ஓம் நமோ நாரா யணாய என்றும் எட்டெழுத்து மந்திரத்தை-வெளியிட்டருளி னான். இதனை முமுட்சுப்படி, 'சம்சாரிகள் தங்களையும் ஈசுவரனையும் மறந்து, ஈசுவர கைங்கரியத்தையும் இழந்து இழந்தோம் என்ற இழவு மின்றிக்கேசம்சாரமாகிய பெருங்கடலிலே, விழுந்து நோவுபட சர்வேசுவரன் தன் கிருபையாலே இவர்கள் தன்னையறிந்து கரைமரஞ் சேரும்படி, தானே சிஷ்யனுமாய் ஆசாரியனுமாய் நின்று, திரு மந்திரத்தை வெளியிட்டருளினான்','s 袭 w என்று பேசும். 15 இமயமலையிலுள்ள ஒரு திருப்பதி, 16 மு முட்சு 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/18&oldid=775594" இலிருந்து மீள்விக்கப்பட்டது