பக்கம்:கலியன் குரல்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$3. கலியனின் வாழ்வும் வழியும் பற்றித் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற இரண்டு திருமொழிகள் பெரியதிருமொழியில் உள்ளன. இலந்தைப் பழம் பெரிய பிராட்டியாரின் திருவுகப்புக் குரியது. திருக்கோயில் முழுவதையும் இருள் சூழ்ந்த நிலையில் ஒரு பெரிய இலந்தை மரம் உள்ள தென்றும், கலியுகத்தில் அது மக்கட்குப் புலனாகாது என்றும் கூறப்பெறுகின்றது இந்த மரத்தின் அடியில்தான் வதரி - நாராயணன் தவசிவடிவில் இருந்து நரலுக்குத் திரு மந்திரத்தை உபதேசித்ததாக வரலாறு. இதுவே இன்றைய வதரி-நாராயணனின் திருக்கோயிலாகத் திகழ்கின்றது. இந்த வதரியைத் திருமங்கையாழ்வார் "பாரோர் புகழும் வதரி???? என்று போற்றுகின்றார் தமது சிறிய திருமடலில்’. எம்பெருமான் ஆசாரியனாய் நின்றது போதாதோ? சிஷ்ய னாய் நின்றது எதன் பொருட்டு? என்ற ஐயம் எழுதல் இயற்கை: இதனையும் தெளிவிப்பேன். சாத்திர முறைப்படி உபதேசிக்கும் ஆசாரியனைச் சென்றடையும் சீடனிடம் சில இலக்கணங்கள்சிஐ நற்பண்புகள் - அமைந்திருத்தல் இன்றியமையாததாகும். இந்த இலக்கணங்கதை உலகத்தாருக்கு அறிவிக்கும் பொருட்டுசெயல்கள் மூலம் உணர்த்தும் பொருட்டு (Leaning by Doing)எம்பெருமான் சீடனாகவும் நின்றான் என்பதை நாம் உணர்தல் வேண்டும். இம்முறை. பலர் பின்பற்றுவதற்கும் வழி யாகவும் அமையும். - - 19. பெரி. திரு 1.3; 1.4 20: சிறிய திருமடல் - கண்ணி-47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/20&oldid=775599" இலிருந்து மீள்விக்கப்பட்டது