பக்கம்:கலியன் குரல்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$4 கலியன் குரல்

  • சிஷ்யனாய் நின்றது. சிஷ்யன் இருக்கும் இருப்பு தாட்டாரதியாமையாலே, அத்தை அறிவிக்கைக்காக?? :

என்று இதனைச் சுருக்கமாக விளக்கம் தரும் முமுட்சுப்படி. இது மேனாட்டுக் கல்வி முறையில் குறிப்பிடப்பெறும் பல புதுமுறை களை ஒருபுடை ஒத்திருக்கும் என்று கூறலாம். தன்னுரலில் கூறப்பெறும், மாணாக்கர்-ஆசிரியர் இலக்கணங் கள் பெரும்பாலும் சமயம் சாராக்கல்விக்கும் பொருந்துவனவாகும். சமயக் கல்வியில் ஈடுபடும் சீடனிடம் சாத்திர நம்பிக்கை, அறங்களை மேற்கொள்ளும் இயல்பு, திருமாவிடம் பக்தி, ஆசாரி வனிடம் அளவற்ற விசுவாசம், ஆசாரியர் மனம் உகக்கும் வண்ணம் செயலாற்றும் சாதுரியம், ஆசாரியருக்குப் பணிவிடை செய்வதில் விருப்பு, தன் உடல் பொருள் ஆவி அறிவு குணங்கள் முதலியவற்றை ஆசாரியனுக்கே உரிமையாக்கும் தன்மை, புலனடக்கம் முதலிய பண்புகள் அமைந்திருத்தல் இன்றியமை. பாதது. . வடகாட்டுத் திருத்தலப்பயணம்: வதரியை அநுபவிக்க வேண்டுமென்று பேரவாவால் திருமங்கையாழ்வார் வட நாட்டுத் திருத்தலப் பயனத்தை மேற்கொள்ளுகின்றார். இதற்குக்காரணம் என்ன? கூறுவேன்; திருமங்கையாழ்வாரின் வாழ்க்கை வரலாற். றில் இஃது ஒர் முக்கிய திருப்பம். வாள்வலியால் மாயோனிடம் மந்திரம் (திருமந்திரம்) கொண்ட நிகழ்ச்சியை மேலே குறிப்பிட்டேன் அல்லவா? இதனை, ويمسيس مبيض دسمسم مسجسعض 31. முமுட்சு - 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/21&oldid=775601" இலிருந்து மீள்விக்கப்பட்டது