பக்கம்:கலியன் குரல்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியனின் வாழ்வும் வழியும் வாழி, பரகாலன்! வாழி, கலிகன்றி வாழி குறையலூர் வாழ்வேந்தன்; - வாழியரோ மாயோனை வாள்வலியால் மந்திரம்கொள் மங்கையர் கோன் துரயோன் சுடர்மான வேல், ' என்ற தனியனாலும் அறியலாம். மந்திரம் பெற்ற மகிழ்ச்சியால் ஆழ்வாருக்கு அர்த்தபஞ்சக ஞானம் ஏற்படுகின்றது. பக்தி வெள்ளம் கரை புரண்டோடுகின்றது. பாசுரங்கள் பெருக்கெடுக் கின்றன. நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்’ என்ற தொடரை இறுதியாகக் கொண்டு பத்துப் பாசுரங் களையுடைய முதல்திருமொழியை அருளுகின்றார். இதனை மேலே குறிப்பிட்டேன். திருமந்திரம் பெற்ற நிகழ்ச்சி திருமந்திரம் பிறந்த இடமாகிய பதரிகாச்சிரமத்தைச் சேவிக்கவேண்டும் என்ற அவாவைத் தூண்டுகின்றது. வடநாட்டுத் திருத் தலப் பயணத்தை மேற் கொள்ளுகின்றார். திருமந்திரப் பொருளின் எல்லை நிலமான திருத்தலங்களில் புக்கு அநுபவிக்க இழிகின்றார், எம்பெருமான் சர்வசுவாமி' என்பதும், ‘சர்வசுலபன்’ என்பதும் திருமந்திரத்தின் தேர்ந்த பொருளாகும். அடியவர்கள் இந்த உடம்புடன் அடிமை செய்து மகிழும்படிக்குப் பாங்காக எம்பெருமான் பல இடங்களிலும் கோயில் கொண்டு தன்னுடைய சுவாமித்துவத்தையும் செளலப் பியத்தையும் விளங்கக் காட்டிக்கொண்டு நிற்கின்றான். ஆகிவே, திவ்விய தேசங்கள். திருமந் நிரப் பொருளுக்கு எல்லை நிலமாக அமைகின்றன. இத்தகைய திவ்வியதேசங்களை மற்றுமுள்ள ஆழ்வார்கள் அநுபவித்தார்களெனினும் திவ்வியதேச அநுபவமே திருத்தலப் பயணமாகக் கொண்டவர் இவ்வாழ்வார் ஒருவரே யாவார். வதரியை நோக்கிச் சென்ற் ஆழ்வார் முதலில் திருப்பிரிதி என்ற திவ்விய தேசத்தை அடைகின்றார். அதனை ன்ெ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/22&oldid=775604" இலிருந்து மீள்விக்கப்பட்டது