பக்கம்:கலியன் குரல்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கலியன் குரல் திருக்கண்ணமங்கைப் பாசுரம் ஒன்றிலும் நின்ற தொத்தினை என்று மங்களாசாசனம் பெறு திருத்தலத்து எம்பெருமானின் திருநாமமும் & பக்தவத் என்பதை அறிந்து வியப்பு அடைகின்றோம்; இங்கும் திருநின்றவூர் என்னைப்பெற்ற தாயாரால் நின்ைஇட் டப் பெற்றவராய் ஆழ்வார் எதிரில் சேவை சாதிக்க, அவரும் நின்றவூர் தித்திலக்தொத்தினை. கனமங்கைt;. தண்டு கொண்டேனே' என்று அப்பிரானையும் சேர்த்து மங்களா சாசனம் செய்தனர் என்பதையும் அறிகின்றோம். நின்றவூர் நித்திலத்தைப் பேசியவுடன் இவ்விடத்தில் நடைபெற்ற இரண்டு சுவையான நிகழ்ச்சிகள் நம் நினைவிற்கு வருகின்றன. அவற்றையும் உங்கள் முன் வைப்பது பொருத்த மாகும். நிகழ்ச்சி 1 இன்று நீலப்பலகையின் ஆதரவில் பாது காக்கப்பெறும் காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டியவன் இராசசிம்மன் என்ற பல்லவ மன்னன்; சுமார் 1250 ஆண்டுகட்கு முன்னர் காஞ்சியைத் தலை நகராகக் கொண்டு அரசோச்சியவன். அவன் திருப்பணி தொடங்கிய அன்றே திருநின்றவூரில் வாழ்ந்த பூசலார் நாயனார் என்பவர் ஒரு கோயில் அமைக்க எண்ணினார். வெறுங்கை முழம் போடுமா? கையில் வெள்ளையப்பன் இல்லாது எப்படிக் கோயில் எழுப்புவது? மானசீகக் கோயில் ஒன்று எழுப்பு கின்றார் தம் மனத்தகத்தில். இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க’ என்று மணிவாசகர் குறிப்பிடும் ஆண்டவனுக்கு அவன் இருக்கும் இடத்திலேயே கோயிலை எழுப்பிய பெருமை பூசலார் ஒருவருக்கே உண்டு. உள்ளுவார் உள்ளத்தாய்' என்று திருமங்கையாழ்வார் குறிப்பிடும் அந்தர்யா மித்துவத்திற்குக் கோயில் எழுப்பியதாக வைணவ சமயத்தில் ਡਾ਼ਾਂ 33 சிவபுராணம் - அடி - 2 3 திருநெடுந் - 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/27&oldid=775612" இலிருந்து மீள்விக்கப்பட்டது