பக்கம்:கலியன் குரல்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியனின் வாழ்வும் வழியும் வரலாறு ஒன்றும் இல்லை. காடவர்கோன் காஞ்சியில் அமைத்த கற்றளி வேலையும், பூசலார் நெடிதுநாள் நினைந்து செய்த' ‘சிந்தை.ஆலயத் திருப்பணியும் ஒரே நாளில் நிறைவு பெறு கின்றன இவிங்கப் பிரதிட்டை செய்து குட முழுக்குவிழா நடை பெற தாளையும் குறிப்பிடுகின்றான் பல்லவ மன்னன். அன்று இரவில் சிவபெருமான் அரசனது கனவில் தோன்றி, நின்றவூர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த நன்று நீ உால யத்து நாளை நாம் புகுவோம்; நீயிங்கு ஒன்றிய செயலை நாளை ஒழிந்து பின் கொள்வாய், ன் என்று கூறி மறைந்தார். திடுக்கிட்டெழுந்த அரசன் பூசலார் வாழும் திருநின்றவூரை அடைந்தான். அந்த ஊரில் திருக் கோயில் கட்டப்பெறும் சின்னம் ஒன்றும் தென்படவில்லை. ஊராரை உசாவிப் பூசலார் இருக்கும் இடம் அறிந்து அவரைக் கண்டான்; அவர் அமைத்த திருக்கோயிலைக் காட்டுமாறு பணித்தான். தான் கண்ட கனவையும் அவருக்கு எடுத்தி யம்பினான். அரசன் கூறியதைக் கேட்ட பூசலார் இறைவனு டைய பெருங்கருணைத் திறத்தினைக் கேட்டுப் பேரானந்தம் அடைந்தார். தம்மையும் இறைவன் ஒரு பொருளாக மதித் தான் என்று எண்ணி அவர் மனம் பூரிப்பால் பெருகிந்து அரசனும் பூசலாரின் பக்தியையும் இறைவனது போருளையும் கண்டு வியப்புற்றான். பூசலார் மனக்கோயிலின் நினைவாகப் பிற்காலத்தார் ஒரு சிறிய கோயிலை எழுப்பியுள்ளனர். இந்தப் பூசலாரைச் சேக்கிழார் பெருமான், 35 பெரியபு. பூசலார். 16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/28&oldid=775613" இலிருந்து மீள்விக்கப்பட்டது