பக்கம்:கலியன் குரல்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

མ༽ སྟ༔ షి. கவியன் குரல் நீண்டசெஞ் சடையி னார்க்கு நினைப்கினால் கோயி லாக்கிப் பூண்...அன்பு இடைய சைத பூசலார் பொற்றான் போற்றில் என்று மகிழ்ந்து போற்றுகின்றார். பிற்காலத்தார் அமைத்த திருக்கோயில் வாயிலில் கோபுரம் இல்லை. தகரக் கொட்டகை ஒன்றுதான் காணப்படுகின்றது. இந்தச் சிறு குடிலில் இருப்பவரே இருதய ஈசுவரர் பூசலார் தம் இதயத்தில் பிரதிட்டை செய்த இலிங்கத்தின் பிரதிநிதி. அவரது துணைவியே மரகதாம்பிகை. இந்த அம்பிகையின் சிலையில் பின்னமுற்றிருப்பதால் பூசை நடைபெறுவதில்லை. புதிய சிலை தயாரிவிருந்தும் ஏனோ பிரதிட்டை ஆகாமல் உள்ளது. கருவரையினுள் இருதயாலய ஈசுவரரின் அருகில் :பூசல் அன்பனும் சிலைவடிவில் காணப்பெறுகின்றார். மனத்தில் வைத்து வழிபாடு நடத்தியவருக்குக் கருவறை யிலும் வைத்துப் பூசனை புரிய வேண்டும் என்று நினைத் தனர் போலும் இக்கோயிலை நிறுவிய அன்பர்கள். இந்தக் கோயிலில் பூசலார் செப்புச் சிலைவடிவிலும் காணப் பெறுகின்றனர். இந்தச் சிலைவடிவில் பூசலார் மார்பில் நெஞ்சுக்கு வெளியே இலிங்கத் திருவுருவம் அமைத்துள்ளனர் அன்பர்கள். பண்டையோரின் அரிய கற்பனைக்கு உரிய உருவம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தனர் போலும் இவர்கள். கிகழ்ச்சி-2: திருநின்ற ஊரில் வாழ்ந்த காளத்திவாணர் என்ற வள்ளலார் ஒருவராலும் இவ்வூருக்கு இலக்கியப் புகழ் ஏற்பட்டுள் ளது. 'தின்றை நித்திலம் பக்தர்கட்குத் தண்ணளி சுரப் பதைப் போலவே நின்றைக் காளத்திவாணர் வறுமையால் வாடும் புலவர்களை ஆதரித்துவந்தார். நீண்டநாளாக வறுமை ੜਨ਼

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/29&oldid=775614" இலிருந்து மீள்விக்கப்பட்டது