பக்கம்:கலியன் குரல்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 கலியன் குரல் பெயர். இஃது இராமபிரான் காடுறை வாழ்க்கையை மேற் கொண்டகாலத்து அனேது திருவுள்ளத்திற்கு மிகவும் பாங்கா யிருத்த தொருமல்ை. சீதாப்பிராட்டியை மணந்த பிறகு இராமன் தேனிலவு’ (Hக; - moon) போன்ற அநுபவத்தைப் பெறு வதற்குக் கருவியாக அமைந்தது. சங்க இலக்கியப் பயிற்சி மிக்கவுடைய கம்பநாடன் குறிஞ்சி நிலத்துக் கருப்பொருளை மிக அற்புதமாகச் சித்திரித்துக் குறிஞ்சி நிலத்து உரிப்பொருளுக்கு வழி யமைத்துக் காட்டுவதைக் கம்பராமாயணம் (அயோத்தியா காண்டம்) சித்திர கூடப்படலத்தில் கண்டு மகிழலாம். இராம பிரானுடைய திருவுளத்திற்கு இந்த மலை பாங்காயிருந்தது போலவே, இத்தலமும் எப்பெருமானது திருவுள்ளத்திற்குப் பங்காயிருப்பதுபற்றி அப்பெயர் இதற்கும் இடம்பெற்ற தென்று பெரியோர் பணிப்பர். இங்கு கோவிந்தராசர் சந்நிதியில்) உற்சவ மூர்த்தி இராமபிரான் காடுறைவாழ்க்கையின்போது சித்திர கூட மலையில் வீற்றிருந்தவண்ணமாகஎழுந்தருளியிருந்தது போலவே எழுந்தருளியுள்ளார். மூலமூர்த்தி பாலாழியில் அறிதுயில் கொள்ளும் பரமன் போலவே சயனத்திருக்கோலமாகிச் சிவ பிரானது நடனத்தைக் கண்டுகளித்திருக்கின்றார். இவ்விடத்தில் சிவபெரும் நடனம் செய்வதற்குரிய காரணத்தை கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்கள் கூறுவதை நினைவு கூர்வதும் பொருத்தமாகும். . தில்லைப் பதிறயுடையான் சிற்றம்பலத் தன்னில் அல்லும் பகலும்நின்று ஆடுகின்றான்-எல்லைக்கண் அண்ணா மலைமன் அமைத்த கலைக்கழகம் கண்ணாரக் கண்டு களித்து.* 38. கவிமணி தேவி. மலரும் மாலையும் . 123 அண்ணாமலை மன்னர்3,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/31&oldid=775618" இலிருந்து மீள்விக்கப்பட்டது