பக்கம்:கலியன் குரல்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 கலியனின் வாழ்வும் வழியும் என்ற பாடலை நினைந்து மகிழ்கின்றோம். இதிலுள்ள தற்குறிப் பேற்றம் நம்மை மகிழச் செய்கின்றது. வள்ளல் அண்ணாமலை யாரின் புகழுக்கு இலக்கியச் சிறப்பு அளித்த கவி மணியைப் போற்றுகின்றோம். இங்கு'தில்லைத் திருச்சித்திர கூடம் சென்று சேர்மின்களே:39 என்றும், காழிச் சீராமவிண்ணகரே சேர்மின்களே?: திரு நறையூர் மணிமாடம் சேர்மின்கள்' என்றும் கூறுவர். இப்படிப் பல திருபதிகளையும் எடுத்துரைத்துச் சென்றுசேருங்கள்.சென்று சேருங்கள்’’ என்றால் எந்தத்திருப்பதியிற் சென்று சேர்வது??? என்று வைணவ அடியார் ஒருவரை ஒரு சாமானியமானவர் கேட்டாராம். அதற்கு அந்த அடியார் ஆழ்வார் திருவாயில் நுழைந்து புறப்பட்ட திருப்பதிகளெல்லாம் நாம் நுழைந்து புறப்பட வேண்டியது பிராப்தம்' என்று மறுமொழி பகன்றா ராம். இந்த இதிகாசம் யாவரும் அறிந்ததே. பதியே பரவித் தொழும் தொண்டர்' என்றும், கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லை என்று மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யல் ஆமே!’ என்று இந்த ஆழ்வாரே திருக்குறுந் தாண்டகத்திலும், 39. பெரி. திரு.3.2, 40, ആു. 8.4 41. டிெ 8, 6 42. டிெ: 43. திருக்குறுந் 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/32&oldid=775619" இலிருந்து மீள்விக்கப்பட்டது