பக்கம்:கலியன் குரல்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியன் குரல் ஆழ்வார்களுள் கிருமங்கை மன்னன் ஒருவர்தாம் இவ் வகிைான சித்திரகவி அருளியுள்ளார். இதைத் தவிர, திருச் குருகைப் பெருமாள் கவிராயர் செய்துள்ள மாறன் அலங்காரம் என்னும் சிறந்த நூலில் சொல்லணியியலில் தம்மாழ்வார் قنابيبتيلييه மிக ஒரு எழு கூற்றிருக்கை பாடியுள்ளார். ஞானசம்பந்தப் பெருமான் அருளியுள்ள தேவாரப் பதிகங்களுள்ளும் (முதல் திருமுறையில்) ஒரு எழு கூற்றிருக்கை உண்டு. எழு கூற்றிருக்கை யாகிய இப்பிரபந்தம் ஆசிரியப்பா வகையில் நிலை மண்டில் ஆசிரியப்பாவாக அமைந்துள்ளது. இஃது திருக்குடந்தை ஆா" அதனை ஆர்த்தியோடு சரணாகதி செய்வதாக அமைந்த பிரபந்தம். தி 5. "திய திருமடல்: இது மடலேறுதல் என்னும் துறையில மைந்தது. இஃது ஆழ்வார் தாமான தன்மையிலிருந்து பேசு கின்ற பிரபந்தம் அன்று கிருட்டிணாவதாரத்தில் குடக் கூத்தில் அன்னவனை அநுபவிக்கப்பெறாது வருந்தி மடலெடுக்கத் துணிந்த ஒரு பிராட்டியின் தன்மையை ஆசதிட்டுக்கொண்டு அவளுடைய பாகாத்தாலே தமது நிலையை வெளியிடும் பிரபந்தம் இது. இஃது அவதாரங்களில் உண்டான நீச்மையை அழிக்கின்றேன்' என்று கூறுவதாக அமைந்தது. இப்பிரபந்தம் கலிவெண்பாவால் அமைந்தது. 8. பெரியதிருமடல்: இதுவும் மடலூர்தல் என்ற துறையில் அமைந்த நீண்ட பிரபந்தம். இதில் நீர்மைக்கு எல்ல்ை நிலமான கோயில்களில் நின்ற நீர்மையையும் அழிக்கின்றேன் என்கின்றார் இதுவும் கலிவெண்பாவால் ஆனது. மடல்பற்றிய கருத்து: இப்பொழிவில் மடல் பற்றிய ஆழ்வாரின் கருத்தைக் கூறி விடலாம் எனக் கருதுகின்றேன். மடலேறுதல். அகப்பொருள் துறைகளுள் ஒன்று என்பதை நாம் அறிவோம். காமம் காழ்க்கொள்ளுங்காலத்தில் ஆடவன் மார்பில் எலும்பு மாலையும் தலையில் எருக்க மாலையும் கொண்டு பனங்கருக் கால் செய்யப்பெற்ற குதிரைமேல்ஏறித் தெருவில்வருவது ‘மடலேறுதல் ஆகும். ஆடவன் மகளிரைக் குறித்து மடலேற லாமேயன்றி பெண் ஆடவனைக் குறித்து மடலூரலாகாது என்பது தமிழ் நெறியில் விதிக்கப் பெற்ற ஒரு வரம்பாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/37&oldid=775624" இலிருந்து மீள்விக்கப்பட்டது