பக்கம்:கலியன் குரல்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 கலியனின் வாழ்வும் வழியும் துண்டுகளாக்கி அச்சக்கரத்தின் இடைவிடாது கொடுத்துவர அதன் நூல்கள் நடுவில் சுற்றிக்கொண்டதனால் அச்சக்கரப் பொறி அசையாமல் நின்று விடுகின்றது. பின்னர் அவ்வழியாகச் தம் சீடர்களுள் ஒருவரை விகாரத்தினுள் இறங்கச்செய்து அவரால் பொற்சிலையை எடுக்கச் செய்கின்றார். சீடர் அதைக் கவரத் தொடங்குகையில் அந்தச் சிலை மந்திர பலத்தால் அவர் கைக்குச் சிக்காமல் அவ்விகாரம் முழுவதும் ஓடத் தொடங்குகின்றது. புறத்திலிருந்து திருமங்கை மன்னன் தந்த குறிப்பின்படி சீடர் அதனைக் கைப்பற்றி விடு கின்றார் உடனே அஃது ஆற்றல் குன்றி, ஈயத்தா லாகாதோ? இரும்பினா லாகாதோ? பூயத்தால் மிக்கதொரு பூதத்தா லாகாதோ? தேயத்தே பித்தளை நற் செம்புகளா லாகாதோ? மாயப்பொன் வேனுமோ மதித்துன்னைப் பண்ணுகைக்கே? என்று அந்தச் சிலை ஊளையிட்டுக் கொண்டு விழுகின்றது. பின்னர் அந்தச் சீடர் அப்பொற்சிலையை எடுத்துக் கொடுக்கத் திருமங்கையாழ்வார் மிக உகந்து அதை வாங்கி பங்கப்படுத்து கின்றார். நாகப்பட்டினத்திலிருந்து இரவோடு இரவாக எடுத்துக் கொண்டு வருகின்றார். பொழுது புலரும் சமயத்தில் திருக்கண்ணங்குடி என்னும் திவ் விய தேசத்தை அடைகின்றார். அங்கு உழுது சேறாயிருக்கும் ஒருவயலில் அச்சிலையைப் புதைத்து வைக்கின்றனர் அவருடன் வந்தவர்கள். அருகிலுள்ள உறங்காப் புளியமரத்தின்கீழ்த் தங்குகின்றனர். அந்த வயலுக்குரியவன் நாற்று முடிகளை எடுத்துக் கொண்டு நடுவதற்காக வருகின்றான். ஆழ்வார் அவனைத் தடுத்து நிறுத்தி இஃது எங்கள் பாட்டன் தேடிய வயல்’’ என்று வழக்கிடத் தொடங்குகின்றார். தோலா வழக்கன் தான் பக்கபலமாக இருக்கின்றானே! அவன் திடுக்கிட்டு எதிர் வழக்கிடுகின்றான். அதற்குப் பாகாலர் "நாளைக் காலையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/46&oldid=775635" இலிருந்து மீள்விக்கப்பட்டது