பக்கம்:கலியன் குரல்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 கலியனின் வாழ்வும் வழியும் உள்ளன. இந்த ஆழ்வாரே தமது திருமாலிருஞ் சோலைப் பதிகத்தில், புந்தியில் சமணர் புத்தரென் றிவர்கள் ஒத்தன. பேசவும் 2.வந்திட்டு எந்தைஎம் மானார் இமையவர் தலைவர் எண்ணிமுன் இடங்கொண்ட கோயில்,: என்று பாடியுள்ளமையே ஒரு சான்றாகின்றது. பகல் பத்து-இராப்பத்துப் பெருவிழா: திருமங்கையாழ்வார் தமது ஆறு திவ்வியப்பிரபந்தங்களையும் அருளிச் செய்த பிறகு திருவரங்கத்திற்கு எழுந்தருளித் திருந்நெடுந்தாண்ட கத்தை தேவகானத்தில் இசைத்துப் பாடுகின்றார். பெரிய பெருமாள் இதைக் கேட்டு திருவுள்ளம் உகக்கின்றார். உமக்கு ಔ536ಳr೩೬] வரம் பெற்றுக் கொள்ளும்’ என்று நியமித்தருள் கின்றார். பரகால்ரும் தேவரீர் மார்கழிமாதத்தில் கண்டருள் கின்ற அத்யயன உற்சவத்தில் நம்மாழ்வார் அருளிச் செய்த திராவிடவேதத்தையும் திருச்செவி சாத்தியருள வேணும்’ என்று பிரார்த்திக்க, பெருமாளும் அவ்வண்ணமே அருள்புரி கின்றர்ர். அவர் ஆணைப்படி மங்கை மன்னன் ஆழ்வார் திருநகரியிலிருந்து அர்ச்சை வடிவமான நம்மாழ்வாரை ஆண்டு தோறும் திருவரங்கத்திற்கு எழுந்தருளச் செய்து அவர் முன் னிலையில் உபயவேதாந்த பாராயணத்தையும் சிறப்பாக நடை பெறச் செய்கின்றார்; பத்து நாள் உற்சவமாகக் கொண்டாட ஏற்பாடு செய்கின்றார். உற்சவம் முடிந்தபின்பு பராங்குசரை மீண்டும் திருக்குருகூருக்கு எழுந்தருளப்பண்ணுவித்து வரு வாராயினார். இங்ங்ணம் பத்து நாட்கள் விழாவாகத் தொடங்கிய திரு அத்யயன உற்சவம் ஆசாரியர்கள் காலத்தில் மீற்றைய ஆழ்வார்களுக்காகப் பத்து நாள் பகல் உற்சவமும் இருபது 78. ப்ெரி, திரு 9.8:'s

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/48&oldid=775637" இலிருந்து மீள்விக்கப்பட்டது