பக்கம்:கலியன் குரல்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 கன்யனின் குரல் நாட்கள் முடித்த பிறகு இயற்பா உற்சவமும் சேர்க்கப்பெற்று, இருபத்தொருநாள் விழாவாக வளர்ந்தது. பட்டர் காலத்தில் திருநெடுந்தாண்டகத்திலுள்ள சிறப்பை நோக்கிப் பகல் பத் திற்கு முந்தின நாள் திருநெடுந்தாண்டக உற்சவமும் சேர்க்கப் பெற்று இப்போது உள்ளபடி நடைபெற்று வருகின்றது. பிற்காலத் தில் ஆழ்வார் திருநகரியிலிருந்து நம்மாழ்வாரை எழுந்தருளப் பண்ணுவதில் பல சிரமங்கள் ஏற்பட்டபடியாலே திருவரங்கத் திலேயே ஆழ்வார்களுடைய உற்சவ மூர்த்தங்கள் பிரதிட்டை செய்விக்கப்பெற்றுத் திரு அத்யாயன உற்சவம் மிகக் சிறப்பாக தடைபெற்று.வருகின்றது திருவரங்கம், காஞ்சி, ஆழ்வார் திருநகரி ஆகிய இடங்களில் இது இன்றும் நடைபெற்று வருகின்றது." ஆராவமூதனிடம் ஈடுபாடு: திருமங்கையாழ்வார் திருக்குடந்தை ஆராவமுதனிடம் அளவற்ற ஈடுபாடுகொண்டவர் என்பது அவரது பாசுரங்களால் தெளிவாகின்றது. மறைந்து போயிருந்த திவ்வியப் பிரபந்தம் வெளிவருவதற்குத் திறவு கோலைத் தந்த வரல்லவா? இந்த ஆழ்வார் இத்தலத்து எப்பெருமானை 'குடந்தை உத்தமன் என்கின்றார்; தண் குடந்தை நகராளன்’ என்று பேசுகின்றார்; கொத்துலாம் பொழில்சூழ்க் குடந்தை தலைக் கோவினை...மறக்கேனே? என்று உளம் உருகப் பாடுகின்றார். துரவிசேர் அன்னம் மன்னும் சூழ்புனல் குடந்தை யானைப் பாவியேன் பாவி யாது பாவியேன் ஆயினேன் ே tதுவி-சிறகு; பாவியாது-சிந்தியாமல்; "பழுதே பலகாலும் போயின’ என்று அங்கலாய்க்கின்றார். திருவுக்கும் திருவாகிய அழுந்தையில் மன்னி நின்ற அஞ்சனக் குன்றம்தன்னைச் சேவிக்கும்போதும் இந்த நகர் எப்பெரு மான் ஆழ்வார் மனக்கண்முன் காட்சி தருகின்றார். *ஆன்மிகமும் அறிவியலும் என்ற இந்த ஆசிரியரின் நூலில்'திவ் வியப்பிரபந்தப் பெருவிழா, என்ற கட்டுரையில் விவரங்கள் காண்க. 8ல் பெரி. திரு1.5: ! ச: டிெ 3.6, 5.5.7; 8.2 டிெ 7; 9; 3 3ே திருக்குறுத். 44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/49&oldid=775639" இலிருந்து மீள்விக்கப்பட்டது