பக்கம்:கலியன் குரல்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఖీ ககயே சின் குரல் முதல் திருமொழியில் இங்ங்ணம் பேசிய ஆழ்வார் இறுதிப் பிரபந்தமாகிய திருநெடுந்தான்.கத்திலும் 'தன் குடந்தைக் கிடந்த மாலை, நெடியானை அடிநாயேன் நினைந்திட் டேனே' எேன்று நாயகி நிலையில் திருக்குடந்தைக் கிடந்த மாலைப் பேசித் தலைக்கட்டுவதால் இப்பெருமான்மீது இந்த ஆழ்வார் கொண்டுள்ள மிக்க ஆதரம் உறுதிப்படுகின்றது. பரகால நாயகி திசிையிலும், பெற்றேன்வாய்ச் சொல்இறையும் பேசக் கேளாள்; பேர்பாடி தன்குடத்தை நகரும் பாடி பொற்றா மரைக்கயம் நீர் ஆடப் போனாள்; பொரு அற்றான் என்மகள் உம் பொன்னும் அஃதேன் 1பேர்-திருப்பேர் நகர்; பொற்றாமரைக் கயம் திருக்குளம்; பொரு-ஒப்பு) என்று தாய்ப்பாசுரமாகப் பேசுவர் ஆழ்வார். இங்கு ஆழ்வார். நாயகி எம்பெதுமானையே பொற்றாமரைக் கயமாகப் பேசுகின் றாள் என்பது பொருந்தும். அகப் பொருளில் புணர்ச்சியைச் சுனை ஆடல் என்றும், ரோட்டம் என்றும் பேசுகின்றோம் அல்லவா? எப்பெருமானோடு கலவி செய்ய விரும்புவதையே இங்குப் பொற்றாமரைக் கயத்திற்கு நீராடப் போவதாகச் சொல்லுகின்றாள். இங்கு இன் சுவைமிக்க பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியானம்: "மகள்' அணியரங்கம்ஆடுதுமோ, என்று ஊரைச் சொன்னாள் (திருநெடுந்-23). தான் பொற்றா மரைக்கயம், என்று பெரிய பெருமாளைச் சொல்லுகின்றாள். 'தயுரதன் பெற்ற மரகத மணித்தடம் (திருவாய் 10,1:8) என்றும், வாசத்தடம் போல் வருவானே? (டிெ 8, 5: 1) என்றும் தடாகமாகச் சொல்லக் கடவதிறே’’ என்பதாம். மேலும் உம்பொன்’ என்கின்றது அல்லாத ஆழ்வர்களை:"மத் துறு கடைவெண்ணெய் காவினிலுரலிடையாப்புண்டு, எத் திறம் உடலினோடிணைந்திருந் தேங்கிய எளிவே (திருவாய் 1. :ே ) என்று அவதாரத்தை அதுசந்தித்தே அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/51&oldid=775642" இலிருந்து மீள்விக்கப்பட்டது