பக்கம்:கலியன் குரல்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியனின் வாழ்வும் வழியும் மோகித்தது; அர்ச்சாவதாரத்திலிறே இவள் மோகிப்பது’ என்ற வியாக்கியானப் பகுதியும் ஈண்டுச் சிந்திக்கத்தக்கது. இந்த ஆழ்வார் ஆராவமுதனிடம் கொண்டிருந்த ஈடுபாடு இவர் அருளிய திருஎழுக் கூற்றிருக்கை என்ற சித்திர கவியாலும் தெளிவாகின்றது. சார்ங்கபாணித் திருக்கோயில் ஊருக்கு நடுவே நடுநாயகம்போல் அமைந்துள்ளது. இத் திருக்கோயில் கும்பகோணத்திலுள்ள எல்லாக் கோயில்களையும் விடப் பெரியது. கோபுரமும் அப்படியே மிகப்பெரிதாக அமைந்துள்ளது. பதினொரு மாடங்களைக் கொண்டது. பெருமாள் சந்நிதியும் முன் மண்டபங்களும் ஒர் இரதம்போல் அமைக்கப் பெற்றுள்ளன. மண்டபத்தின் நான்கு பக்கங்களிலும் சக்கரங்கள், இரதத்தை இழுத்துச் செல்லும் குதிரைகள் இருக்கின்றன. இதனை நோக் கிய திருமங்கையாழ்வாரும் இத்திருக்கோயில் எம்பெருமானைப் பற்றி மங்களாசாசனம் செய்துள்ள திருஎழுக்கூற்றிருக்கை: என்ற பிரபந்தம் இரதபந்தம்’ என்ற சித்திரக் கவியாக அமைத்தனர். இது சரணாகதித் தத்துவத்தை விளக்கம் பாசுரமாகும். குன்றா மதுமலர்ச் சோலை வண்கொடிப் படப்பை வருபுனல் பொன்னி மாமணி அலைக்கும் செந்நெல் ஒண்கழனித் திகழ்வனம் உடுத்த கற்போர் புரிசைக் கனக மாளிகை நிமிர்கொடி விசும் ல்ே இளம்பிறை துவக்கும் செல்வம் மல்கு தென்திருக் குடந்தை அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க ஆடு அரவு அமளியில் அறிதுயில் அமர்ந்த பரம நின் அடியினைப் பணிவன் வரும்இடர் அகல மாற்றோ வினையே 88 38. திருஎழுகி இடி (37:45,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/52&oldid=775643" இலிருந்து மீள்விக்கப்பட்டது