பக்கம்:கலியன் குரல்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியனின் குரல் - குைக்கு ஒரு சிறிய சந்திதி உள்ளது. ஹேமமுனிவரின் தினை இாக இத்திருக்குனம் ஹேமபுஷ்கரிணி என்றும், இலக்குமி பொற் ஜாடிரையில் பாலகோமளவல்லியாக அவதரித்தமையால் பொற் ஜர்மரைக்குணம் என்றும் திருநாமம் பெற்று வழங்குகின்றன. இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்யும் பூதத்தாழ் வார், படமூக்கின் ஆயிரவாய்ப் பாம்பணைமேல் சேர்ந்தாய் குடமூக்கில் கோயிலாக் கொண்டு ' (குடமூக்கு-கும்பகோணம்} என்று பாடுவார்; ஒரு புராணவரலாற்றையும் நினைவுபடுத்து வார். ஒரு காலத்தில் நான்முகன் அமிர்தம், வேதங்கள் படைப்பின் விதைகள் ஆகியவை ஒருகலசத்தில் (கும்பம்) சேர்த்து அக்குடத்தை (கும்பம்-குடம்) மேருமலையின் உச்சியில் வைத்திருந்தார். பிரளயகாலத்தில் இக்குடத்தை வெள்ளம் அடித்துக்கொண்டு போய் விட்டது. அது வெள்ளத்தில் மிதந்து தெற்கு தேசக்கி வந்தது. வெள்ளம் வடிந்ததும் திருக்குடம் கும்பகோணத்தில் (கும்பம்-குடம், கோணம் முக்கு) தங்கியது. தேவர்களின் வேண்டு கோளின்படி சிவபெருமான் ஒர் அம்பெய்து திருக்குடத்தை உடைத்தருளினார். குடத்திலிருந்த அமுதம் இரண்டு பிரிவாகப் பாய்ந்து ஒன்று மகாமகக்குளமாகவும், மற்றொன்று பொற்றாமரைக் குளமாகவும் அமைந்துவிட்டன. உடைத்த குடத்து ஒடுகளையும் அமிர்தத்தையும் சிவலிங்க மாக்கினர். கும்பத்திலிருந்த பெருமான் கும்பேசர்என்ற பெயருடன் கோயில்கொண்டுவிட்டார். ஊரும் கும்பகோணம் என்ற திருப்பெயரையும் பெற்றது. இந்தப் புராண வரலாறு நம்மைத் திருவேங்கடவன், அரங்கநகர் அப்பன், ஆராவமுதன் என்ற மூவதையும் நினைக்கச்செய்கின்றது. கும்பேசர்கோயிலுக்கும் சார்ங்கபாணி கோயிலுக்கும் இணைப்பு ஏற்படுத்திவிடுகின்றது. சை வைணவ ஒற்றுமைக்கும் ஒருங்ாலமும் அமைத்துக்காட்டு கின்றது. - தி இர்ன்திருவித் 5:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/55&oldid=775647" இலிருந்து மீள்விக்கப்பட்டது