பக்கம்:கலியன் குரல்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்கள்-இலக்கிய இன்பம் தமிழ்நடையிலும் நெகிழ்ச்சி அமைந்தது. மக்கள் கூட்டம் கூட்ட மாகப் பாடித் திருக்கோயிலைச் சுற்றி வந்து வழிபடும் முறைக்கு ஏற்றவாறு இசை இனிமையும் நடை எளிமையும் கூடினமையால் தமிழ் இலக்கியத்தில் ஒருவித புத்துணர்ச்சி பிறந்தது. புதியஇலக் கிய உத்திகளும் கையாளப் பெற்றதால் சமுதாயத்தில் பெரும் பாலேசர் இலக்கியத்தைத் துய்க்கமுடிந்தது. பாமர மக்கள் மனத் திலும் இலக்கிய வானம் கவிந்து அவர்களிடமும் முருகுணர்ச்சி எழுவதற்குக் காரணமாயிற்று. 'பண்ஆர் தமிழ் 12 செயிரில் சொல் இசைமாலை இருந் தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன்? : கலிகன்றி செஞ்சொலால் எடுத்த தெய்வ நன்மாலை 15 என்ற ஆழ்வார் பெருமக்களின் வாக்குகளாலேயே இப்பாசுரங்கள் இசையுடன் பாடப்பெறுபவை என்பதை வலியுறுத்தும். திருவாய்மொழி முழுமைக்கும் பெரிய திருமொழியில் கிட்டத்தட்ட முக்கால் பங்கு அளவிற்கும் பண் - தாளக்குறிப்புகள் அமைந்திருத்தல் கவனித் தற்குரியது. பண்ணார் பாடல் இன்கவிகள் யானாய்த் தன்னைத் தான்பாடி தென்னா என்னும் என் அம்மா திருமா லிருஞ்சோ லையானே? என்ற நம்மாழ்வாரின் திருவாக்கு முத்தாய்ப்புவைத்தமாதிரி ஆழ்வார்கள் இசையோடு பாடினர் என்பதைத் தெளிவாக்கு 72.TFöï9.8:1 73. ઈલેક્ટ્ર 3, 2: ?? 74. இரண். திருவந் 85 75. பெரி. திரு. 1, 1; 10 76. திருவாய் 10. 7:15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/58&oldid=775650" இலிருந்து மீள்விக்கப்பட்டது