பக்கம்:கலியன் குரல்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர், கலைமாமணி, தமிழாகரர், டாக்டர் ஆறு. அழகப்பன், தமிழியல் துறைத் தலைவர், முதன்மையர் இந்திய மொழிப்புலம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம். அணிந்துரை அண்ணாமலைப் பல்கலைக் கழகச் சிறப்புப் பொழிவுகள் திட்டத்தின்கீழ், பேராசிரியர் டாக்டர் க. சுப்பு ரெட்டியார் அவர்கள் தமிழியல் துறையில் நிகழ்த்திய மூன்று பொழிவுகள் கேலியன் குரல்’ என்ற தலைப்பின்கீழ் இந்நூலாக வெளிவரு கின்றது. பேராசிரியர் க. சுப்பு ரெட்டியார் அறிவியல் ஆசிரியராகத் தம்பணியினைத் தொடங்கி, தலைமை ஆசிரியராகப் பொறுப் பேற்றுப் பின்னர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில்:ணியாற்றியவர். ஆழ்வார் அருந்தமிழால் ஈர்க்கப் பெற்று வித்துவான், முனைவர் பட்டங்கள் பெற்றுத் திருவேங்கடவன் பல்கலைக் கழகத் தமிழியல் துறைத் தலைவராகப் பல்லாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற அறிஞர் ஆங்கிலம் மற்றும் தமிழ் நூல்களைக் கசடறக் கற்ற புலமையாளர்; தமது சிந்தனைகளை நூலாக்கும் திறம் பெற்றவர். ஓயாத உழைப்பாலும் எழுத்தாற்றலாலும் இலக்கிய்ம் சமயம், திருத்தலப்பயணம், திறனாய்வு, வரலாறு: அறிவியல், ஆராய்ச்சி, பயிற்று முறை என்று பல்வேறு துறை களில் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக எண்பத்தைந்திற்கு மேற் பட்ட நூல்களைத் தமிழன்னைக்கு அளித்துச் சிறந்து விளங்குபவர்; இன்று வளர்ந்து வரும் அறிவியல் தமிழுக்கு இவர் ஒரு முன்னோடி டாக்டர் க. சுப்புர்ெட்டியார் அவர்கள் கடந்த இருபத்தெட்டு ஆண்டுகளாக ஆழ்வார் அருளிச் செயல்க்ளிலும் வைணவ தத்துவங்களிலும் கொண்ட ஈடுபாட்டின் கார்ணத்தால் கலியன் குரல் என்ற பொதுத் தலைப்பில் கலியனின் வாழ்வும் வழியும், அருளிச் செயல்கள் - இலக்கிய இன்பம், அருளிச் செயல்கள்-தத்துவக் கருத்து என்ற மூன்று ஆராய்ச்சிப்பொழிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/6&oldid=775652" இலிருந்து மீள்விக்கப்பட்டது