பக்கம்:கலியன் குரல்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களை நிகழ்த்தினார்கள். கலியன் என்பது திருமங்கை யாழ்வாரின் திருபெயர்களில் ஒன்று. இப்பொழிவுகளின் வழி அமைந்த இந் நூலில், ஆசிரியர் கலியனின் வாழ்வு பற்றிய உண்மைகளை ஆழ்வார் பாசுரங்களிலிருந்து அகச்சான்றுகள் தந்து நிறுவியுள் ளார், கலியனின் அருளிச் செயல்களை எடுத்துரைத்துப் பக்திச் சுவையினையும் கவிகையனுபவத்தையும் விரித்துரைத்துள்ளார். திருமங்கையாழ்வார் நாலுகவிப் பெருமாள்” என்று சிறப்புப் பெற்றவராதலால் அவர்தம் பெரும்புலமையினை எளிதாக விளக்கியுள்ளார். அவர் தம் பதிகங்கள் சிலவற்றில் நாட்டுபுற இலக்கியக் கூறுகள் அமைந்துள்ளதனைச் சுவைபட மொழிந் துள்ளார். இறுதிப் பொழிவில் ஆழ்வார் பாசுரத்தின் வழி அறியப் பெறும் வைணவ தத்துவக் கருத்துக்களை விரித்துள்ளார். திருமங்கையாழ்வார் மங்களா சாசனம் செய்த திருத்தலங்கள், 108 வைணவ திவ்விய தேசங்கள், பொருட் குறிப்பு ஆகியன, பின் இணைப்பாகத் தரப் பெற்றுள்ளன. சுருங்கக் கூறின் இந்நூல் நல்லதொரு ஆராய்ச்சி நூலாகும். இப்பொழிவுகள் நிகழக் காரணமாக இருந்த இந்திய மொழிப் புலக்குழு உறுப்பினர்களும் ஆட்சிக்குழு உறுப்பினர்களும், மாண்பமை துணை.ேந்தர் பேராசிரியர் இராம.சேது.காராயணன் அவர்களும் நன்றிக்குரியவர்கள் ஆவர். தந்தை வழி, தமிழ் மொழியை வளர்த்து வருகின்ற மாண்பமை இணைவேந்தர் டாக்டர் மு. அ. மு இராமசாமி அவர்களுக்கும் நூலாசிரியரும் துறைத்தலைவரும் தனித்த முறையில் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள். இப்பொழிவுகளை அச்சுக்குக் கொண்டு வரத்துணை நின்ற தமிழியல்துறை நூல் வெளியீட்டுப் பொறுப்பாளர் இணைப் பேராசிரியர் டாக்டர். வெ. பழகியப்பன் மற்றும் நூலினை விரைந்து அச்சிட்டு வெளிக் கொணர்ந்த பல்கலைக்கழக நூல் வெளியீட்டுத் துறைப் பொறுப்பாளர் வெ. இலக்குமணன் ஆகியோருக்கும் எம் நன்றி. நூலினைச் சிறப்புற அச்சிட்ட சிதம்பரம் கஜேந்திரா அச்சகத்தார் பாராட்டுகுரியவர் ஆவர். டாக்டர் ஆறு. அழகப்பன் தமிழியல் துறைத் தலைவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/7&oldid=775663" இலிருந்து மீள்விக்கப்பட்டது