பக்கம்:கலியன் குரல்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 : அருளிச் செயல்கள் - இலக்கிய இன்பம் களின்மூலம் படிப்போரின் எழுச்சிகளையும் அறிவினையும் கிளர்ந்ததெழச் செய்தல் இயலும்; இதனைக் கருதியே கவிதை யில் படிமம் கையாளப் பெறுகின்றது?’ என்று கூறுவர் பர்ட்டன் என்ற ஆங்கிலத்திறனாய்வாளர் கவிதைத் திறனாய்வு என்ற தமது நூலில். மேலும் அவர் கூறுவார்: 'புலன்கட்கு முறையீடு செய்வதற் கேற்ப படிமங்கள் வகை செய்யப்பெறுகின்றன; செவிப்புலப் படிமங்கள், கட்புலப் படிமங்கள், சுவைப்புலப் படிமங்கள் (பேstatory iாages). நாற்றப்புலப் படிமங்கள் (It factory images), albirii țâoi, lig.torii seir (Tactual images), இயக்கப்புலப் படிமங்கள் (Kinesthetic images), மரபு வழிப் படிமங்கள் என்பவையாகும்' என்று எண்னத்திற்கும் புலன் காட்சிக்கும் குறியீடுகளாக இருப்பவை சொற்களாகும் என்பதை நாம் அறிவோம். ஒரு கவிதையைப் படிக்கும்போது அக் கவிதையிலுள்ள சொற்கள் அல்லது சொற்கோவைகள் சில பல படிமங்களை நம் மனக்கன் முன் கொண்டுவந்து நிறுத்து கின்றன. புலன்களின் மட்டத்தில் துண்டல்கள் (Stimli) செய்வதைப்போலவே படிமங்களும் கருத்து நிலைச் (ideational level செயல்களில் நம் புலன்களைத் தூண்டி நம் மிடம் கவிதையநுபவத்தை எழுப்பிக் கவிதையைத் துய்த்து மகிழ்வதற்குத் துணையாக அமைகின்றன. மேலும் சில சொற்கள் நம்மிடம் கட்டுண்ட படிமங்களையும் (Tied images), விடுதலைப் படிமங்களையும் (Free images) எழுப்பி விடுகின்றன. இவையும் கவிதையை நுகர்வதற்கு இன்றியமையாத கூறுகளாக (Sine quo non) ego punáéör par. திருமங்கையாழ்வார் பாசுரங்களில் இத்தகைய படிமங்கள் அமைந்திருப்பதால் பாசுரங்களைப் பயில்வோரின் மனத்தில் இவை தோன்றி கவிதை பநுபவத்தைக் கிளர்ந்தெழச் செய் கின்றன. படிப்போரைக் பக்திக் கொடுமுடிக்கும் கொண்டு செலுத்துகின்றன. எடுத்துக் காட்டுகளாக சிலவற்றைக் காட்டுவேன். பார் ஆவது உண்டு உமிழ்ந்த பவளத்துரண்' (பெரி. திரு 2. 5. 1), களங்கனி முறுவல் காரிகை (4ை.2.7:7),

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/70&oldid=775664" இலிருந்து மீள்விக்கப்பட்டது