பக்கம்:கலியன் குரல்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 கலியன் குரல் இந்தப்பாடலில் காட்டப்பெற்றுள்ள காட்சி இது: ஆண்யானை யொன்று சூல் கொண்டுள்ள தன் இளம் பிடியின்மீது அளவற்ற அன்பு கொண்டுள்ளது. ஒருமலை இடுக்கில் ஒரு பெரிய தேன் கூடு உள்ளது. அதில் தேன் ததும்பி நிற்கின்றது. ஆண் யானை அண்மையிலுள்ள மரத்தினின்றும் ஒரு தழைக் கொத்தினை ஒடித்து அதனைக் கொண்டு அம் மழலை வண்டினை ஒச்சுகி ன்றது. பிறகு அந்தத் தேன்கூட்டினை அப்படியே அசை யாமல் தன் துதிக்கையினால் வாங்கி சூல் நிறைந்து உண்பதற்கும் சிரமப்படும் தன் பிடியின் வாயில் தின்னு மாறு தந்து நிற்கின்றது - கல்கத்தா ரஸ்குல்லாவைத் தருவது போல. பிரிதி அமைந்துள்ள சூழ்நிலை இது: இங்குச் சிறு துளிகளை புடைய காள மேகங்கள் அதிர்கின்றன. தோகைகளையுடைய மயில்கள் ஏற முடியாமல் உன்னதமான மலையுச்சியில் கீழ் வயிறு தழுவும்படியாக ஏறிச் சென்று தோகைகளை விரித்துக் கூத்தாடுகின்றன ( ). மலைபோன்ற வடிவினையுடையன வாய், வடிவிற்கேற்ப மிடுக்கையுடையனவாய், மிடுக்குக்கு உரிய சினத்தையுடையனவான வாய் மதக்களிறுகள் அஞ்சும் படியாக வாள் போன்ற பற்களையுடைய சிங்கங்கள் திரிகின்றன.(2). இந்திர நீலமணி மயமான பாறைகளின்மீது வேங்கைமலர்கள் உதிர்ந்து கிடக்கும் அழகிய படுக்கையின்மீது களிறுகள் தம் பிடி களுடன் கிடந்து உறங்குவதற்குப் பாங்காக வண்டுகள் இன் னிசை பாடுகின்றன. (3). பன்றிகள் தலை குனிந்து மாணிக்கப் பாறைகளைப் பிளக்க அதனால் பெயர்ந்த மணிகள் மலையருவி களுடன் அடித்து வரப் பெறுகின்றன (4). முகில்வரை எட்டி வளர்ந்த குருக்கத்திப் பூஞ்சோலைகளில் வண்டுகள் தேனினைப் பருக நுழைந்து இசைபாடுகின்றன (6). அசோக மலர்கள் விரி பும்போது செந்நிறத்தோடு திகழும் அழகைப் பேதை வண்டுகள் நெருப்பென மயங்கி அஞ்சுகின்றன (9). மிளகுக் கொடிகள் விண்ணை எட்டும் வேங்கை மரங்களைத் தழுவிப் படர்ந்து நிற்கும் சிறு மலைகளில் வேங்கை வரிப்புலிகள் நடமாடுகின்றன (7). இருள் சூழ்ந்த மலை முழைஞ்சுகளில் பெரும் பசியுடன் மலைப்பாம்புகள் பெருமூச்சுவிட்டுக் கொண்டுள்ளன (8). கறுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/77&oldid=775672" இலிருந்து மீள்விக்கப்பட்டது