பக்கம்:கலியன் குரல்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 அருளிச் செயல்கள் - இலக்கிய இம்பம் மாமுகில்கள் நீர் கனத்தாலே இயங்க முடியாமல் ஓரிடத்தில் நின்று இடியோசைகளை எழுப்பு அவற்றை யானைகளின் பிளி றல்கள் என மயங்கி மலைப்பாம்புகள் மலை பெயர்ந்தாற் போல் பெயர்ந்து காத்துக் கிடக்கின்றன (10). வதரியில் நர-நாராயணன் எழுந்தருளியிருக்கும் ஆச்சிரமத் தின் சூழ்நிலை இது: இந்த ஆச்சிரமம் ஆகாய கங்கைக்ரையி லுள்ளது. தேவர்கள் கற்பகமலர்களைக் கொண்டு வந்து சமர்ப் பித்து வணங்கும் இடம் (1); நான்முகனுடன் ஏனைய தேவர் களும் அடிக்கடி வந்து வழிபாடு நடத்தும் இடம் (2); பகலவன் வலம் வரும் மேருமலைவரை முட்டி அங்கிருந்து கங்கை நீர் இழிவதும் மாடமாளிகையின் உச்சியில் நாட்டப்பெற்ற துரண் களில் கட்டப்பெற்றுள்ள துணிகள் கசற்றில் அசைந்தாடுவது போல் தோன்றுவது மான இடம் (3); கங்கை நீரில் அப்லர மாதர்களின் சேலைகளையும் மாலைகளையும் திரட்டி வருவதுடன் பல்வேறு இரத்தினக் கற்களையும் உருட்டிக் கொண்டு வருவதைக் காணலாம் (4); இங்குத்தான் அண் டத்தைச் சுமக்கும் மேருமலையின் உச்சியிலிருந்து கங்கை இழிகின்றது (5); சகரபுத்திரர்கள் துய்மையைடைவான் வேண்டி பகீரதன் தவம்புரிந்து கங்கையைக் கொணருங்கால், அதுபெரியதொரு மலையைப் பிளந்து கொண்டு அங்குள்ள களிறுகளைத் தள்ளிக் கொண்டு வருவதைக் காணக்கூடிய இடம் (6); கங்கை ஒருமுகமாக வந்து இழிந்தால் பெருவிசை யோடு வரும் மிடுக்கைக் கடல் பொறாதென்று கருதிய தேவர் களின் பிரார்த்தனைக் கிணங்க அது பல முகமாகப் பெருகிவரும் இடம் (7); இந்தக் கங்கையின் வரலாற்றைத்தான் விசு வாமித்திரன் இராம.இலக்குமணர் கட்குக் கூறியதாகும் (8); பகீதரன் கங்கையைக் கொணர்ந்தபோது அது பிரம்ம லோகத்தை ஊடறுத்துக் கொண்டு ஆகாயத்தினின்றும் இழிந்து அங்கிருந்து பூமி நடுங்கும்படியாகப் பிரவகித்துத் தெளிந்த நீரையுடையதாகின்றது (9). சாளக்கிராமத்து அடிகள் எழுந்தருளியுள்ள இடத்தின் சூழ்நிலை இது: இத்திருத்தலம் நீர்வளம் மிக்க நிலத்தைக் تركة 7 دقيق TFSته وهة

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/78&oldid=775673" இலிருந்து மீள்விக்கப்பட்டது