பக்கம்:கலியன் குரல்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கவியன் குரல் மலைத்த-ஆக்கிரமிக்கப்பெற்ற, சாத்து-பயணிகளின் கூட்டம்; பூசல்-போர், பேரொலி; துடி-பறை;வாய்கடுப்ப -ஒலிக்க; தெழிப்பு-ஆரவாரம் ; என்பது ஆழ்வாரின் திருவாக்கு. திருத்த லப் பயணமாகப் பலர் அந்த அடவியில் செல்லுகின்றனர். அவ்விடத்து வேடர்கள் அவர்களைத் தகைந்து போரிடுவர். அப்டோரில் வேடர்களின் வில்லோசையும், பறையோசையும் இடைவிடாது இருந்து கொண்டே இருக்கும். இப்பொழுது இம்மலையில் வாழும் வேடர்கள் செஞ்சு என்ற பெயர்களால் வழங்கப்பெறுகின்றனர். இவர்கள் மரபில் பிறந்த மங்கையொருத்தியை எம்பெருமான் உகந்து மணந்து கொண்டதாகத் தலவரலாறு கூறுகின்றது. இதனால் ஆந்திரத்தில் மகளிருக்குச் செஞ்சு லட்சுமி என்று பெயரிடும் வழக்கமும் இருந்து வருகின்றது. திருவேங்கடத்தின்இயற்கை யெழிலைவிட அங்கு எழுந்த ருளியிருக்கும் நெடியோன்’ இவர் உள்ளத்தைக் கவர்ந்தனால் அவனிடம் அதிகமாக ஈடுபட்டுவிடுகின்றார் ஆழ்வார். இருப்பினும் இயற்கையெழில் மின்வெட்டுபோல் சித்திரிக்கப்பெறு கின்றது, செங்கயல் திளைக்கும் சுனைத் திருவேங்கடம்’ (பெரி திரு 1. 8:1) கன்றி மாரி பொழிந்திட ... திருவேங்கடம்’ (1.8: 3), காரும் வார்பனி நீள் விசும்பிடைச் சேரும் மாமுகில் தோய்தர சேரும் வார்பொழில் சூழ்எழில் திருவேங்கடம்” (t. 8; 7), வாசமாமலர் நாறு வார்பொழில் சூழ்தரும் ... மலைத்திரு வேங்கடம்’ (1. 8: 9), வேய்ஏய் பூம்பொழில் சூழ்விரைஆர் திருவேங்கடம்’ (19: 4), தேன்.ஏய் பூம்பொழில்சூழ் திரு வேங்கடமாமலை’ (1.9:2), குன்றுஏய் மேகம் அதிர் குளிர் மாமலை வேங்கடம்’ (1. 9: 3.), நிலம்தோய் நீள்முகில்சேர் நெறிஆர் திருவேங்கடம்’ (1. 9: 4.), செப்புஆர் திண்வரை சூழ்திருவேங்கடம் (1.9:5), ... என்றெல்லாம் திருமலையைப் பற்றி உளங்குளிரப் பேசுவார் ஆழ்வார். வேடர்கள் காரகிற் கட்டைகளை விறகாகக் கொண்டு சமைப்பதால் உண்டாகும் புகை திருமலை எங்கும் கமகம’ என்று பரிமளித்துர் கொண்டி ருக்கும். குறத்திகளும் வண்டுகளும் குறிஞ்சி முதலிய பண்களைப் பாடுவர். இங்குக் கவரிமான்கள் கூட்டம் கூட்டமாக உலவும்: இப்படியாக அசித்துப் பொருள்களையும் அநுபவித்து மகிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/81&oldid=775678" இலிருந்து மீள்விக்கப்பட்டது