பக்கம்:கலியன் குரல்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கலியன் குரல் மலையினின்றி.ழியும் அருவிகள் சந்தனக் கட்டைகளையும் இரத்தினக் கற்களையும் உருட்டிக் கொண்டு வருகின்றன (9. 8; 1 ; ; விண்ணளவும் ஓங்கி உயர்ந்துள்ள சோலைகளில் மானினங்கள் மலையின் நீலப்பாறை வழிகளில் புகுந்து எங்கும் மேய்ந்து கொண்டிருக்கும் காட்சி நம்மனத்தைக் கவர்கின்றது (9, 8; 73; குறவர்கள் தம் கையிலுள்ள கவனில் வைத்தெறியும் மணிகளின் ஒளி மலையெங்கும் வீசுகின்றது (9. 8:3). மருத கிலக்காட்சிகள் ; தென்னார்க்காடு, தஞ்சை, திருச்சி மாவட்டங்களிலுள்ள திவ்விய தேசங்கள் யாவும் நீர்வளம் திலவளமிக்க மருதநிலச் சூழவில் அமைந்துள்ளன. இத்திருத் தலங்கட்கு வருங்கால் ஆழ்வார் மருதநிலக் காட்சிகளில் ஆழங்கால் படுகின்றார். தொண்டை நாட்டுத் திருத்தலப் பயணத்தை முடித்துக் கொண்டு நடுநாட்டிற்கு வருகின்றார். முதலில் திருக்கோவலூர் திரிவிக்கிரமனைச் சேவிக்க வரு கின்றார். இத் திவ்வியதேசம், பாவருந் தமிழாற் பேர்பெறு பனுவற் பாவலர் பாதிநாள் இரவில் மூவரும் நெருக்கி மொழிவிளக் கேற்றி முகுந்தனைத் தொழுதநன் னாடு 49 என்று வரந்தருவார் புகழ்ந்து கூறும் படியான முதலாழ்வார் மூவரும் ஒருவரை யொருவர் சந்தித்து அந்தாதி பாடின தலம் இது; ஏன்? நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் பிறந்ததற்குக் காரணமான வரலாற்றுப் புகழ்பெற்ற திவ்வியதேசம்; தென் பெண்ணையான்றின் தென்கரையில் அழகான சூழ்நிலையில் அமைந்துள்ளது. இந்த ஊர்ச் சூழ்நிலையைக் காட்டும் ஆழ்வார், எழுந்தமலர்க் கருநீலம் இருந்தில் காட்ட இரும்புன்னை முத்தரும்பிச் செம்பொன் காட்ட செழுந்தட நீர்க்கமலம் தீவிகைபோல் காட்டும் திருக்கோவலூர்.' இTவில்லிப்ார் இம்சிெறப்புப் பாயிரம்.9 41. பெ.கி. திரு: 22 19 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/83&oldid=775680" இலிருந்து மீள்விக்கப்பட்டது