பக்கம்:கலியன் குரல்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

לל அருளிச் செயல்கள்-இலக்கிய இன்பம் இருந்தை-கரி; செம்பொன்-பசும் பொன்; தீவிகை. விளக்கு} என்பது அவர் உருவகித்துக் காட்டும் காட்சி. இதை ஒரு தட்டானின் பொற்களரியாக உருவகித்துக் காட்டுகின்றார். பொற் களரியில் கரிகள் கொட்டப் பெற்று நிரம்பியிருக்கும்; பொன்களும் முத்துகளும் நிறைந்திருக்கும்; நெருப்பு செந் நிறத்துடன் ஒளிர்ந்து கொண்டிருக்கும். இங்குக்கருநீல மலர்கள் கரித்துண்டுகளாகவும், புன்னை மொக்குகள் முத்தாகவும், புன் னைப் பூக்கள் பொன்னாகவும், தாமரைப் பூக்கள் திகழ்ந்து தட்டானின் பொற்களரிபோல் காணப்பெறுகின்றது. இந்தக் காட்சி நெஞ்சில் நிற்பதாக அமைந்து இலக்கிய இன்பத்தை நல்குகின்றது. இங்கே இன்னொரு காட்சியைக் காண்போம். அடியவர்க்கு ஆர் அமுதம் ஆன திரிவிக்கிரமனை எங்குக் காண்கின்றார்? அவரே கூறுகின்றார்: கோங் அரும்பு சுரபுன்னை குரவார் சோலைக் குழாம் வரிவண் டிசைபாடும் பாடல் கேட்டுத் தீங்கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த திருக்கோவ லூர் அதனுள் கண்டேன் நானே." |கோங்கு - ஒரு மரம், குரவு-ஒரு வித மரம்; குழாம்க கூட்டம்; வரிவண்டு-அழகிய வரிவண்டுகள்; தீங் கரும்பு- இனிய கரும்பு, கண் வளரும் கண்கள் ஏறி வளர்ப்பெற்ற, உறங்கும்; கழன்-வியல் சோலைகளும் வயல்களும் சூழ்ந்த இடம் திருக்கோவலூர் என் கின்றார். கோங்குஅரும்புகளும், சுரபுன்னைகளும், குரவ மலர்களும் செறிந்து திகழும் சோலைகளில் வண்டுகள் கூட்டம் கூட்டமாக மதுஉண்ட களிப்பாலே இசைபாடுகின்றன. இத்தகைய சோலைகளினாலும் கண்கணாகச் செழித்துவளரும் கரும்பு 42, 2, டிெ 9: 4,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/84&oldid=775682" இலிருந்து மீள்விக்கப்பட்டது