பக்கம்:கலியன் குரல்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#g கவியன் குரல் களையும் கொண்ட வயல்களினால் சூழப்பட்டது திருக்கோவலூர் என்கின்றார் ஆழ்வார். இங்குக் கூறப் பெற்ற அடியவர்கள்’ பொய்கையார், பூதத் தார், பேயார் என்னும் முதலாழ்வார்கள். இவர்கள் சந்தித்து அந்தாதி பாடிய வரலாற்றை நாம் அறிவோம். அவர்கட்குத் ‘தேனே பாலே கண்ணலே அமுதே' என்னும்படி இருந்தவன் இத்தலத்து எம்பெருமான் - திரிவிக்கிரமன். அதனால் இவன் அவர்கட்குத் தீங்கரும்பு ஆகின்றான். கரும்புக்கு நீர் பாய்ச்ச, அது கணுக்கள் விட்டு வளர்கின்றன; வண்டுகளின் இசைப் பாடலாகிய இன்ப ரசம் பாயப் பெற்றுக் கணுக்கள் வளரப்பெறு கின்றன; இதனால் வண்டுகளின் பாடல் ரஸ்மாய் இருக்கின்றது என்றும் உணர்த்தியவாறாகும். நம் நாட்டுத் தாவர நூற் பேரறி ஞர் சர். ஜே சி. போஸ் இசையினாலும் செடிகள் வளர்கின்றன. என்றுகூறிய உண்மையும் ஈண்டுச் சிந்திக்கத் தக்கது. எம்பெருமான் ‘தீங்கரும்பாக உருவகப்படுத்தும்பொழுது வண்டுகள் முதலாழ்வார்களாக உருவகம் பெறுகின்றனர். அவர் கள் பாடும் பாசுரங்கள் முதல் மூன்று அந்தாதிகளிலுள்ளவை, ஆழ்வார்கள் இந்தப் பாசுரங்கள் பாடுவதைக் கேட்டு திருக் கோவலூர் தீங்கரும்பு (இறைவன்) கண் வளர்கின்றானாம். இந்த நிகழ்ச்சியை நினைந்து வேதாந்த தேசிகர் தம் தேகளிஸ் துதி” என்னும் சிறுநூலை அமைக்கின்றார். இது வடமொழியா லான நூல். மூன்று ஆழ்வார்களும் மிருகண்டு முனிவர் இல்லத்துத் தேகளி ரேழி)யில் எம்பெருமானை மூன்று ஆலை உருளைகள் போல் நெருக்குதலால் திருக்கோவலூர்த் தீங்கரும்பினின்று பிழியப்பெறும் செளலப்பியம்’ என்னும் ரஸத்தைப் பக்த கோடி கள் பருகி அநுபவிக்கின்றனர் என்று அற்புதமாகக் காட்டுகின் றார். இங்ங்னம் தமிழ் இலக்கியம் பல வடமொழிப் புலவர்கட்குத் தாம் இயற்றும் நூல்கட்கு கருத்து தானம் வழங்கியுள்ளது என்பதையும் சிந்தித்து மகிழ்கின்றோம். இந்தப் பாசுரங்களில் ஆழ்வார் பொதுவாக அழகெல்லாம் திரண்ட திருமேனியைக் கொண்ட எம்பெருமானை ஒரு பாதி ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/85&oldid=775683" இலிருந்து மீள்விக்கப்பட்டது