பக்கம்:கலியன் குரல்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியன் குரல் பருகச்சென்று சேர்கின்றன. 'துர விரிய மலருழக்கித் துணை யோடும் பிரியாதே பூவிரிய மது நுகரும் பொறிவரிய சிறு வண்டுகள் பேடைகளுடனே கூடித் தாமரை மலரிலிருந்து கொண்டு மது பானம் பண்ணா நிற்கையில் தம்பதிகளிடையே ஊடல் உண்டாகின்றது. பேடை ஆண்வண்டை நோக்கி, ‘இனி நீ சிவிக்கும்படி யெல்லாம் நான் காண்கின்றேன்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிக் குருக்கத்திப் பந்தலிலே சென்று புகுந்தொளிக்கின்றது; அதைப்பிரிந்து ஆற்ற மாட்டாத ஆண் வண்டு தனது இப்பேடை ஊடல் தீர்ந்து ஓடிவருமாறு தனது கஷ்டநிலைகளை வெளியிடுகின்ற இன்னிசைப்பாடல் களைத் தாமரை மலரினின்று நிகழ்த்தா நின்றது உரையாசிரியர் பெரியவாச்சான் பிள்ளை இதற்கு உள்ளுறைப் பொருள் கூறுவர். 'பிராட்டியும் தானுமான சேர்த்தியில் பிரணய கலகம் (ஊடல்) மாறாதே செல்லுமா போலேயாயிற்று அங் குத்தை (அங்குள்ள) திர்யக்குகளுடைய (விலங்குகள்) யாத்திரை யும்’ என்பது அவருடைய அருளிச்செயல். வண்டானது சாகை நுனியிலே திரியுமாபோலே வேத சாகைகளின் நுனியிலே (உபநிடதம்) விளங்குகின்ற எம்பெருமான் பிராட்டியோடே ஊடல் கொண்டு செய்யும் படிகளைச் சொல்லிற்றாகக் கொள்ள வேண்டும். சாலையின் இருபுறமும் ஓங்கி வளர்ந்த கருப்பஞ்சோலைகள் காட்சி தருகின்றன (1) தவிர, குரங்குக்கூட்டம் ஒருமரத்தினின்றும் பிறிதொரு மரத்திற்குத் தாவித் திரிந்து கீசு கீசென்ற பேரொலி கள் செய்கின்றன; பலாமரத்தைக் கண்டதும் அதன் மதுரமான கனிகளை உட்கொள்கின்றன (5) இந்தத் திவ்வியதேசம் சிறிய மலைகள் சூழ்ந்ததாதலால், அம்மலையின் அருகே செந்நெற் கழனிகளிலே தாமரைத் தடாகங்கள் உள்ளன; அங்குள்ள தாமரைமலர்களிலே அன்னப்பறவைகள் தம் துணையோடும் பொருந்தி வாழ்வதற்கேற்ப, அதற்குப் பாங்காகச் சாமரம் வீசு வதுபோல் செந்நெற்கதிர்கள் இனிது வீசுகின்றன (7) இத்திருத் தலத்தின் அருகில் ஒடுவது கருடநதி. இதில் பெருவெள்ளம் வரும் போது யானைத் தந்தங்களையும் அகிற்கட்டைகளையும் மற்றும் பல மணி மாணிக்கங்களையும் கொழித்துக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/87&oldid=775685" இலிருந்து மீள்விக்கப்பட்டது