பக்கம்:கலியன் குரல்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

  • -

கலியன் குரல் என்று கூறுவாள் குடிக்கொடுத்த சுடர்க்கொடி. எம்பெருமானு டைய திருத்துழாய்ப் பிரசாதத்தைக் கொணர்ந்து தனது தலையில் சூட்டினால்தான் தனது காதல் நோய் தீரும் என் கின்றான். ஆனால் பு:காலநாயகி வண்டுகள் திருத்துழாயில் படித்து வந்து ஊதினால் போதும் என்கின்றாள். இவ்விடத்தில் மணிவாசகப் பெருமானின் திருக்கோத்தும்பி’ பதிகமும் சித்திக்கத் தக்கது. இங்கு அடிகன் ஒர் அரசவண்டை தேசக்கிப் பேசுகின்தார். தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே நினைத்தொறும் காண்டொறும் பேசுந்தோறும் எப்போதும் அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன்சொரியும் குனிப்புடை யானுக்கே, சென்று தாய் கோத்தும் பி.88 (தினைத்தனை-தினையளவு; உள்நெக- உன் உருக ! ‘'நீ மலர்தோறும் ஊதுவதால் கிடைக்கும் தேன் சிறிய அளவினது. எப்பொழுதும் மாளா இன்பத்தேன் சொரியும் குனிப் புடையான் திருவடித் தாமரைக்கண் சென்று ஊதுவாயாக. இந்தத் தேன் என்றும் பசியா இன்னமுதாய் என்பும் உருக்கி உணர்வினில் இனிது உயிர்க்கு ஒவா வனம் தரும்' என்று பேசுவர் அடிகள். பண்டிருந்து இப்படி வண்டினை ( வண்டுகளை) விளித்துப் பேசுவது ஒர் இலக்கியமாக இருந்து வருகின்றது. திருநாங்கூர்த் திருப்பதிகள்பற்றிய இயற்கையழகு சொல்லுத் தரமன்று. ஒவ்வொருவரும் படித்து அநுபவிக்க வேண்டியது. விரிவஞ்கி அதனுள் புகவில்லை. என்னுடைய சோழகாட்டுத் 55. இருவி. திருக்கோத்.3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/93&oldid=775692" இலிருந்து மீள்விக்கப்பட்டது