பக்கம்:கலியன் குரல்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 அருளிச் செயல்கள்-இலக்கிய இன்பம் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி என்னும் நூலில் விரிவாக விளக்கப்பெற்றுள்ளது. ஆண்டுக் கண்டு தெளிய வேண்டு கின்றேன். சிதம்பரத்தை அடுத்துள்ள காழிச் சீராமவிண்ணகரத்தை வருணிக்கும் போது பல அற்புதமான காட்சிகளில் ஆழங்கால் படுகின்றோம். இத் திருத்தலத்தைச் சூழ்ந்துள்ள வயல்களில் சங்குகள் கருவுயிர்க்கும் நிலையில் உள்ளன; உழுகின்ற எருதுகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடுகின்றன; அந்த அதிர்ச்சியினால் சங்குகள் முத்துகளைக் கருவுயிர்க்கின்றன. அம்முத்துகளைக் கொக்குகள் தம்முடைய முட்டைகளாக மயங்கி அவற்றைச் சுற்றிப் பறந்து கொண்டிருக்கின்றன (2). வண்டுகளின் செய்தி நம்மை மகிழ்ச்சியூட்டுகின்றது. வண்டுகள் செங்கழுநீர் மலர்களில் தம் பேடைகளுடன் கூடிக் குலவுகின்றன; இதனாலுண்டான சோர்வுக்குப் பரிகாரமாக, தாமரைப் பூக்களையடைந்து அங்குள்ள தேனைப் பருகித் துயின்று களைப்புத் தீர்கின்றன; பின்பு தாழை மடலின் சுண்ணங்களிலே (பூந்தாதுகளில்) போய்ப் புரண்டுத் தம் களிப்பின் மிகுதியால் இசைப்பாடுகின்றன (9). காழியின் ஊர்த் தெருக்களின் வருணனை மிக அற்புதமாய் அமைந்துள்ளது. கடலில் உள்ள சங்குகள் கடலைத் துறந்து தாழைகள் மலிந்த கழிகளை வந்தடைகின்றன; பின்னர் வயல்களில் பாய்கின்றன; வயலில் உள்ள வாய்க்கால்கள் வழி யாக ஊரினுள் புகுகின்றன; தெருக்களை அடைகின்றன; நீர் வடியும்போது மேலும் போக முடியாமல் முத்துகளைக் கருவுயிர்க்கின்றன (7). மாதர்களைப்பற்றிய சமத்கார வருணனை நமக்கு மகிழ் ஆட்டுகின்றது. வயல்களில் களை பரிக்கும் கடைசி மார்கள், நெய்தலோடு மையனைந்த குவளைகள்தம் கண்கள் என்றும் மலர்க்குமுதம் வாய்என்றும் கடைசி மார்கள் செய்யணைந்து களை களையாது ஏறும் காழின. 56. பாரி நிலையம், 184, பிரகாசம் சாலை, சென்னை-600 108, 57. பெ. திரு. 3.4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/94&oldid=775693" இலிருந்து மீள்விக்கப்பட்டது