பக்கம்:கலியன் குரல்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ கலியன் குரல் (மை அணைந்த- கருமை நிறம் மிக்க; கடைசி மார்கள் - களை பறிக்கும் பெண்கள்; செய் - வயல்; அணைந்து - இழிந்து; களை களையாது - களைபறியாமல்; ஏறும் - கரை ஏறும், ! என்று காட்டப்பெறுகின்றனர். கழனிகளில் பயிர்களினிடையே நெய்தல், குமுதம், குவளை முதலியவற்றின் வளர்ச்சியால் பயிரின் வளர்ச்சி குறைபடுமாதலால் அவற்றைக் களை பறிப்பது வழக்கம். அங்ஙனம் களை பறிப்பதாக வயலில் இழிந்த கடைசி மார்கள் அந்த நெய்தல் குவளை, குமுதம் ஆகிய மலர்களை முதலிரண்டைக் தங்கள் கண்களாகவும், மூன்றாவதைத் தம் வாயாகவும் பாவித்துத் தம்முடைய அவயவங்களையே தாம் பறிக்க நேர்ந்தனவே என்று கையொழிந்து களை பறியாமலேயே வெளியேறுகின்றனர். நகரிலுள்ள அழகிய மாதர்களை, விகிர்த மாதர் அவ்வாய வாள்நெடுங்கண் குவளை காட்ட அரவிந்தம் முகங்காட்ட அருகே ஆம்பல், செவ்வாயின் திரள்காட்டும் வயல்சூழ் காழிக9 விகிர்தமாதர் - அழகிய பெண்கள்; அவ்வாய . அப்படிப்பட்ட அரவிந்தம் - தாமரை). என்று காட்டுவர். இந்தப் பெண்கள் குவளை போன்ற கண்ண ழகும் கமலம் போன்ற முக அழகும் செவ்வாம்பல் போன்ற வாயழகும் உடையவர்கள் என்கின்றார். சில ஊர்க் குறிப்புகள்: (1) சோலைகளின் நிலைமையைக் கூறும் ஆழ்வார், 58. பெரி. திரு. 3. 4: 3 59, டிெ 3, 4: த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/95&oldid=775694" இலிருந்து மீள்விக்கப்பட்டது