பக்கம்:கலியன் குரல்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 அருளிச் செயல்கள்-இலக்கிய இன்பம் அணில்கள் இால நெட்டிலைய கருங்கமுகின் செங்காய் விழ நீள் பலவின் தாழ்சினையின் நெருங்கு பீனத் தெட்டபுழம் சிதைத்துமதுச் சொரியும் காழி' (பினம்- பருத்த, தெட்ட கனியப் பழுத்த ; சிதைந்து - நசுங்கி; என்று காட்டுவர் ஆழ்வார். அணிற்பிள்ளைகள் மரங்களில் தாவித் திரிகின்றன. அவை பாக்கு மரங்களில் தாவும்போது அந்த உராய்தலினால் செங்காய்கள் உதிர்ந்து பலாப்பழங்களின் மீது தொப்' என்று விழுகின்றன. அதனால் அப்பழங்கள் பிளவுற்று உள்ளிருந்து தேன் வெள்ளமிட்டுப் பெருகுகின்றது. தெட்டபழம்: இதுபற்றி ஒரு வரலாறு உண்டு. எம்பெருமானார் இந்தப் பிரபந்தக் காலட்சேபம் நடத்தியருளிய போது தெட்ட? என்பதற்குச் சரியான பொருள் விளங்கவில்லை என்று அருளிச் செய்து வைத்தார். பின்பொருகால் திவ்விய தேச யாத்திரை யாக எழுந்தருளும் போது இத்தலத்தின் சோலை வழியே வந்து கொண்டிருந்தார். அங்கே நாவல் மரங்களின்மீது சில சிறு பிள்ளைகள் ஏறிப் பழம் பறித்துக் கொண்டிருந்தனர். கீழே இருந்த சில பிள்ளைகள் அண்ணே! தெட்ட பழமாகப் பார்த்துப் பறித்துப் போடு என்கின்றனர். இதை எதிர்பாராது கேட்ட ருளிய எம்பெருமானார், பிள்ளாய்! தெட்டபழம் என்றால் என்ன?’ என்று வினவ, அவர்கள் கனிந்த பழம் என்று மொழிந்தனர். உடையவர் திருவுள்ளம் உவந்து இஃது ஒருதிசைச் சொல் போலே இருந்தது; நம்மாழ்வாரின் திருநாவாய் பற்றிய திருவாய்மொழிப் பதிகத்திலே குறுக்கும் வகையுண்டு கொலோ என்றதை ஒக்கும் இது என்று அருளிச் செய்தாக உரையில் ஒரு குறிப்பு உள்ளது. 60. பெரி. திரு. 3, 4: 3 61. திருவாய்: 9, 8: !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/96&oldid=775695" இலிருந்து மீள்விக்கப்பட்டது