பக்கம்:கலியன் குரல்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9; அருணிச் செயல்கள்-இலக்கிய இன்பம் பள்ளி கமலத் திடைப்பட்ட பகுவாய் அலவன் முகம்நோக்கி நள்ளி யூடும் வயல்சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே , (கமலம்-தாமரையூ; பகுவாய்-பெரிய வாய்; அலவன்-ஆண் நண்டு; நள்ளி-பெண் நண்டு)

  • தாமரைப்பூவில் படுத்துக் கொண்டிருந்த ஆண் நண்டின் முகத்தைப் பெண் நண்டு பார்த்து ஊடல் செய்யப் பெற்ற வயல் சூழ்ந்த நறையூர்- என்பது நேர் பொருள்; மூல பாடத்தை யொட்டியது. பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில் கண்டது (பட்டர் அருளிச் செய்ததைக் குறிப்பாகக் கேட்டிருந்த நம்பிள்ளை அருளிச் செய்தது): ஒர் ஆம்பல் மலரில் நண்டுத் தம்பதிகள் இனிது வாழ்கையில் நிறைசூல் கொண்ட பேடைக்கு இனிய பொருள்களைக் கொணர்ந்து தர வேண்டும் என்று அலவனுக்கு ஆசை உண்டாயிற்று பிறகு தாமரைப் பூவிலிருந்து நல்ல மகரந்தத்தைத் திரட்டிக் கொணர்ந்து கொடுக்க விரும்பி மெல்ல மெல்ல நகர்ந்து தாமரைப் பூவை அடைந்தது. அவ்வயம் பகலவன் மறையவே. அத்தாமரை மலர் முடிக் கொண்டது. அலவன் அதற்குள் அகப்படுக் கொண்டது. தாமரையை மலர்த்திக் கொண்டு எப்படியாவது வெளிக்கிளம்பி விடவேண்டுமென்று எவ்வளவோ முயன்றும் பயன் அளிக்க வில்லை. மறுநாள் பகலவன் உதயமானாலல்லது தாமரை மலராது. உடம்பைக் கொண்டு புரண்டு இரவு முழுதும் அதிலே தங்கியிருந்து பொழுது விடிந்ததும் மலர்ந்த தாமரையினின்றும் வெளிப்பட்டுத்தாதும் சுண்ணமும் உடம்பிலே நிழலிட்டுத்தோற்ற தன் மனைக்கு விரைந்து வந்து சேர்ந்தது; பகற்பொழுதில் ஆம்பல் மலர் மூடிக்கொள்ளும். ஆண் நண்டு அங்கு வந்து சேரும் சமயமும் பெண் நண்டு கிடக்கும் ஆம்பல் மலர் மூடிக்கொள்ளும் சமயமும் ஒன்றாக இருந்தது. இதனைப் பார்த்தால், ஆண் நண்டு

63. பெரி. திரு. 6. 7: 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/98&oldid=775699" இலிருந்து மீள்விக்கப்பட்டது