பக்கம்:கலியன் குரல்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 கவியன் குரல் இரவில் வேறிடத்தில் தங்கி வந்தபடியாலும் உடம்பில் சுவடு இருந்தபடியாலும் கவடு இல்லாத ஆண்நண்டின் மீது ஊடல் கொண்டது பெண் தண்டு; கதவையும் அடைத்துக் கொண்ட படியாகவும் இருந்தது. இஃது அகப்பொருளில் 'வாயில் மறுத்தல்” துறைக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு. ஒரு புறத்தில் மலர்ந்த தாமரை மலர்களும் மற்றொரு புறத்தில் குவிந்துள்ளன. வுமான ஆம்பல்மலர்களும் விளங்கப்பெற்ற வயலால் சூழப்பட்டது நறையூர் என்று வயல்வளம் கூறிய ஆழ்வாரின் கற்பனைத் திறமும் அதற்குப் பொருத்தமாக அற்புத விளக்கம் தந்த பட்டரின் கூரிய அறிவும் நம்மை வியக்க வைக்கின்றன. இதனைப் பட்டர் அருளிச் செய்ததும் பிள்ளை திரு நறையூர் அரையர் ஆராய்ந்து குற்றம் கண்ட பிறகு அன்றோ தண்டிக்கவேண்டும்? என்று சொல்ல, அதற்குப் பட்டர் என் செய்வோம்? கேள்வியில் லாத படி பெண்ணரசு நாடாய்த்தே' என்று அருளிச்செய்தார். (திருநறையூர் என்ற நாச்சியார் கோவிலில் எம்பெருமானுக்கு முக்கியத்துவம் இல்லை; பிராட்டிக்கு தான் எல்லா முக்கியத்துவமும். திருவீதி புறப்பாடுகளில் நாச்சி யார் முன்னே எழுந்தருள்வதும் எம்பெருமான் பின்னே; எழுந்தருள்வதுமாக இருக்கும் ஆணரசு நாடாகில் கேட்பாருண்டு: பெண்ணரசு நாடாததால் கேட்பாசில்லை. இதுவும் ஒரு ாலோக்தி; நயம்பட உரைக்கும் திறமாகும். (4) திருவிண்ணநகர் - என்பது கும்பகோணத்திற் அருகி லுள்ள ஒரு திவ்வியதேசம்; ஒப்பலியப்பன் சந்நிதி என்று வழங்கப் பெறுவது. இத்திருத்தலம் ஆழ்வாரின் மூன்று பதிகங் கனால் மங்களாசாசனம் செய்யப்பெற்றுள்ளது. இந்தப் பதிகங்களுள் ஒரு பாசுரத்தில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/99&oldid=775701" இலிருந்து மீள்விக்கப்பட்டது