பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரங்கு, கொட்டகை அமைப்பு

150

அரங்கு, கொட்டகை அமைப்பு

வல்ல சினிமா தோன்றியபின் , நாடக அரங்கில் ஏராளமான பொருட் செலவு செய்து, எத்தகைய காட்சியை அமைத்தாலும் ,அது பெரிதாகத் தோன்றுது. ஆகையால், கற்பனைக்கு இடந்தரும் எளிய காட்சி அமைப்புக்களே தற்காலத்தில் சிறப்பாக மதிக்கப்படுகின்றன. ஆகையால், இதற்கேற்றவாறு தற்கால அரங்கு குறுகலாய்விட்டது. அதன் முகப்பில் பழங்காலத்திலிருந்த அலங்காரங்கள் மறைந்துவிட்டன. காண்போர் உள்ள இடத்துடன் அரங்கு ஒன்றக இணையும் காலமே வந்துவிட்டது.

அண்ணாமலை மன்றம், சென்னை
உட்புறத் தோற்றம்

உதவி: தமிழ் இசைச் சங்கம், சென்னை

பல வடிவங்களிலும் விசேஷமான பல பயன்களுக்கு ஏற்றவாறும் மின்சார விளக்குகளைப் பெற முடிகிற்து. ஆகையால் அரங்கமைப்பில் நிகழ்ந்திருக்கும் பல மாறுதல்களுக்கு மின்சார விளக்குகள் அடிப்படையாக உள்ளன என்பதில் வியப்பில்லே. தற்கால அரங்கின் காட்சித் திரையைத் தீட்டும் ஓவியக்காரர் ஒளி அமைப்பாளரேயாவர். இவர் கையாளும் முறைகளால் காட்சி நம்முள் தோன்றுகிறது. இரண்டடித் தொலைவிலுள்ள மலையை இரண்டாயிரம் அடித் தொலைவிலுள்ளதுபோலவோ,அட்டையாலான உருவத்தைப் பெரும்பாலமாகவோ, வானளாவிய கட்டடமாகவோ, சுவருக்குப் பின்னுலுள்ள வானம் எல்லையற்றது போலவோ ஒளி அமைப்பினுல் காட்ட முடிகிறது. நடிகனின் குரலேவிட நாடகக் காட்சியின் ஒளித் தோற்றமே காண்போரது உணர்சிகளே விரைவாகவும் அதிகமாகவும் கட்டுப்படுத்துகிறது. ஒரு காட்சியின் உட்பொருளை விளக்க அதற்கேற்ற ஒளி இன்றியமையாதது. அரங்கில் எவ்வகை மாறுதலும் இன்றி, ஒளிமாற்றங்களாலேயே ஒரு நாடகத்தின் பல அங்கங்களையும் நிகழ்த்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஒளி அமைப்பின் சிறு மாறுதல்களும் பாவத்தை அறவே மாற்றலாம்.

ஒளி அமைப்பு: பழங்காலத்தில் நாடக அரங்கைப் பந்தங்களால் ஒளி பெறச் செய்தனர்; பின்னர் மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்தும் வழக்கம் தோன்றியது. பதினெட்டாம் நூற்றாண்டுவரை இம்முறையை அதிகமாக வழங்கியது. இதன் பின்னர் எண்ணெய் விளக்குகள் வழக்கத்திற்கு வந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எரிவாயுவைக் கொண்டு நாடகக் கொட்டகைகளில் விளக்கெரிக்கும் முறை தோன்றியது. இந்த விளக்குக்களில் மான்டில்களைப் பயன்படுத்தும் முறை தெரிந்தபின் இவற்றின் பயன் அதிகமாயிற்று. எரிவாயு விளக்குகளைத் தேவையானவாறு கட்டுப்படத்த முடிந்ததால், அரங்கின் ஒளியமைப்பைக் கட்டுப்படுத்தி விசேஷ விளைவுகளைக் காட்ட முடிந்தது. இதன் பின்னரே நாடகத்