பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரிச்சித்திரம்

190

அரிசி

விடுவார்கள். செப்புத் தகடா யிருந்தால் ஐம்பது பிரதிகள் வரை எடுக்கலாம். தகட்டின் மீது எக்கோ குரோமியமோ பூசியிருந்தால் ஐம்பதுக்கும் அதிகமான பிரதிகள் கிடைக்கும்.

பல பெரிய ஓவியர்கள் தம் ஓவியங்களை நேராக அரிச்சித்திரமாகத் தகட்டில் வரையவோ, அல்லது முதலில் கடுதாசியில் வரைந்த சித்திரத்தைத் தகட்டில் வரையவோ, அல்லது பிறர் சித்திரங்களைத் தகட்டில் வரையவோ இந்த அரிச்சித்திர முறையைக் கையாளுகிறார்கள்.

அரிச்சித்திர முறை 15-ஆம் நூற்றாண்டில் தோன்றியது. அரிச்சித்திரக்காரருள் மிகச் சிறந்தவர் என்று கூறப்படுபவர் டச்சு ஓவியரான ரெம்பிராண்ட் (Rembrandt 1606-69) என்பவர், அவருடைய அரிச்சித்திரங்களுள், 'மூன்று குடிசைகள்' என்பதும், ‘கிறிஸ்து நோயாளிகளைக் குணப்படுத்தல்’ என்பதும் புகழ் வாய்ந்தவை. பிற்காலத்து அரிச்சித்திரக்காரருள் பேர்பெற்றவர் ஸ்பெயின் நாட்டினரான பிரான்தீஸ்கோ காயா (Francisco Goya 1746-1828) என்பவராவர். அவருடைய ‘போரின் தீமைகள்’ என்பது மிகச் சிறந்ததாம். அமெரிக்காவிலிருந்த விஸ்லர் (Whistler 1834-1903) என்பவரும் பேர்பெற்றவர். தாமஸ் டேனியல் (Thomas Daniell 1749-1840) என்ற ஆங்கிலக் கலைஞர் 1784-ல் இந்தியாவிற்கு வந்து, நாட்டின் பல பகுதிகளிலும் கண்ட காட்சிகளை அரிச்சித்திரங்களாக வரைந்தார். சாதாரண முறையில் இவர் சித்திரத்தை வரைந்து, பிரதி எடுத்து, ஒவ்வொரு பிரதிக்கும் தனியே வர்ணங்கள் தீட்டினார். 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வேறு சில ஆங்கிலேயரும் இந்திய நாட்டுக் காட்சிகளை அரிச்சித்திரங்களாக வரைந்தார்கள். அவற்றுள் ஒன்று இங்கு தரப்பட்டுள்ளது.

அரிச்சித்திரம் : சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் ஒரு பகுதி
உதவி : தொல்பொருள் இலாகா, சென்னை.

அரிசி : உலக மக்களுள் செம்பாதியினரின் தலையாய உணவுப்பொருள், ஆண்டுதோறும் 21 கோடி ஏக்கரில் பயிராகிப் பத்தேமுக்கால் கோடி டன் அரிசி விக்கிறது. அரிசி விளையும் நிலத்தில் 95% தென்கிழக்கு ஆசியாவில் உள்ளது. எஞ்சிய நிலம் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும், எகிப்திலும், இத்தாலியிலும், ஸ்பெயினிலும் உள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு இத்தாலி (2863 ராத்தல்), ஸ்பெயின் (2671), ஜப்பான் (2952) ஆகிய நாடுகளில் மிகுதியாகவும், எகிப்து (1890), கொரியா (1593), அமெரிக்கா (1390). ஜாவா (1034) ஆகிய நாடுகளில் ஈடுத்தரமாகவும், தாய்லாந்து (888), பர்மா (816), இந்தியா (772) ஆகிய நாடுகளில் குறைவாகவும் விகாகிறது.

ஆசிய காடுகளில் மிகுந்த நிலத்தில் பயிரான போதிலும், பர்மா, இந்தோ -சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகள் தான் வெளிநாட்டுக்கு அரிசி ஏற்றுமதி செய்யக்கூடிய நிலையில் உள்ளன. உலகத்துக்குத் தேவை மிகுதி; புதிதாகப் பயிர் செய்யக்கூடிய நிலப்பரப்புக் குறைவு. அதனால், இப்போது பயிராகும் நிலத்தில் விளைவைப் பெருக்கவேண்டியது இன்றியமையாததாகும். இது செறிவு முறை வேளாண்மையைக் கையாண்டால் நடை பெறுவதாகும்.

அரிசியின் தோற்றம் : உணவுப் பயிர்களில் செல் மிகப் பழமையானது. பண்டைக் காலமுதல் இந்தியா, சீனா, இந்தோ-சீனா ஆகியவற்றில் பயிர் செய்யப்பட்டு வந்திருக்கிறது என்பதற்குப் பழைய நூல்களில் ஆதாரங்கள் உள்ளன. தானியங்களுள் பெரும்பாலானவை போல இதுவும் புல் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். நெல்-