பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அனசூயை

276

அனவரத விநாயகம் பிள்ளை

உண்ணும் பழம் பூவின் காம்பே. அதுவே கொட்டை முதிரும்போது வளர்ந்து, அழகிய நிறங்களுள்ளதாய் காரமும் இளிப்புமுள்ள சாறு நிறைந்த பொய்க் கனியாகின்றது. இது அமெரிக்காக் கண்டத்து மரம், பிஸ்தாக்கியோ கொட்டையின் பருப்பும் தின்னலாம். இதன் ஓரினத்திலிருந்து ஒருவித டசப்பென்டீன் எடுக்கிறார்கள். ஒதிய மரம் சாலைகளில் நடவும் ஏற்றம் போடவும் பயன்படுகிறது. வெயிற் காலத்தில் இதன் இலைகள் உதிர்ந்து விடுவதால் நிழல் கொடுப்பதில்லை. கிளைகளை வெட்டி ஈட்டால் அவை எளிதாக வளர்ந்து விடும். செல்கொட்டை {கேராள்கொட்டை} இளங்காயிலிருந்து எடுக்கும் கறுப்புப்பால் பருத்தி ஆடைகளுக்குக் குறி வைப்பதற்கு உதவும். சேங்கொட்டைப் பாலினால் ஒருவகை வார்னிஷ் செய்கினார்கள். காட்டு மாம்பழம் தின்னக்கூடிய சிறு பழம். அதன் விதையே சுவையான சாரப்பருப்பு. ரூஸ் (Rhus) மரம் தோல் பதனிடவும் சாயம் போடவும் உதவும். இதில் ஓரினம் லாக்கர் (Lacquer) மரம். மற்றோரினத்தின் காயிலிருந்து மெழுகு எடுக்கிறார்கள் மா, மூந்தில், சேங்கொட்டை முதலியவற்றைப் பற்றிய தனிக் கட்டுரைகள் உண்டு.

அனசூயை இந்துப் புராணங்களித் கூறப்படும் தக்கன் மகள் ; அத்திரி முனிவர் மனைவி; இவளுடைய கற்பைச் சோதிக்கச் சென்ற முத்தேவரையும் குழந்தைகளாக்கியவள்; இராமன் காட்டிற்கு வந்த போது சீதைக்கு வேண்டிய நலம் புரிந்தவள்.

அனதாரி தொண்டை நாட்டில் வாயல் என்னும் ஊரினர்; கம்பனைப்போலும் கூத்தனைப்போலும் புகழ் பெற்றவரெனத் தொண்டை மண்டல சதகம் கூறும். இளமையிற் சோணாட்டுக்கு வந்து, உறத்தூரில் அந்தணரொருவரிடம் தமிழ்க்கலை பயின்றார். அக்காலத்துக் கன்றாப்பூர்த் தலைவரான தீங்கரரயனால் ஆதரிக்கப் பெற்றார். கல்லூர், மன்றை என்ற ஊர்களின் தலைவனும் கச்சிவீரப்பன் என்ற மன்னனுக்கு அமைச்சனுமான திருவிருந்தானது வேண்டுகோளால் சுந்தர பாண்டியம் என்ற நூலைப் பாடினார். நூல் பாடிய காலம் 1563. இது மகாவித்துவான் ரா. இராக வையங்காரவர்களால் அச்சிடப்பட்டது.

அனந்த சயனம் திருவனந்தபுரம் மலை நாட்டு வைணவத் திருப்பதிகளில் ஒன்று. பெருமாள் திருகரமம் அனந்தபதுமநாபர். பிராட்டிவார் திருநாமம் ஸ்ரீ லட்சுமி நாச்சியார், ஏமகூட விமானம். இலக்குமி தீர்த்தம். பார்க்க: திருவனந்தபுரம்.

அனந்த சதுர்த்தசி ஒரு விரதம். திருமாலை வழிபடுவதற்குள்ளது. புரட்டாசி மாசச் சக்கிலபட்ச சதுர்த்தசி தினம்.

அனந்தப்பூர் சென்னை இராச்சியத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தின் தலைநகரம். விஜயாகர அரசருடைய திவானாக இருந்த சிக்கப்ப உடையார் அமைத்துத் தமது மனைவி அனந்தம்மையின் பெயரையிட்டார். நகராட்சிப் பட்டணம். நன்செய் சூழ்ந்தது. மக்: 31,952 (1951). அனந்தப்பூர் மாவட்டம் 1882-ல் பல்லாரியிலிருந்து பிரிக்கப்பட்டது. இதன் வட, மத்தியப் பகுதிகள் பல குன்றுகள் நிறைந்த பீடபூமி, தென் பகுதி மலைப் பாங்கானது. குத்தியிலும் பெனுகொண்டாயிலும் குன்றுகளில் கோட்டைகளையொத்த பாறைகள் உள்ளன. முக்கிய விளைபொருள்கள் புன்செய்த் தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி. மாவட்டத்தின் பரப்பு: 6,706 ச.மைல் ; மக் : 13,61,556 (1951).

அனந்தபாரதி ஐயங்கார் (1786-1864) தஞ்சையிலிருந்து, உத்தர ராமாயணக்கீர்தனை, பாகவத தசமஸ்கந்த நாடகம், யானைமேலழகர் நொண்டிச்சிந்து முதலிய இசை நாடகத் தொடர்பான நூல்களை இயற்றியவர்.

அனந்தராமையர், இ. வை. (1872-1931) தஞ்சை மாவட்டம் இடையரற்று மங்கலம் ஊரினர். தந்தையார் வைத்தீச்சுர

ஐயர், தாயார் தையலம்மாள். சிறந்த தமிழ்ப்புலவர். வடமொழி கற்றவர். நினைவாற்றல் மிக்கவர். செய்யுள் இயற்றுவார். கும்பகோணம் நகர உயர்நிலைப்பள்ளி, மயிலாப்பூர் பென்னாத்தூர் சுப்பிரமணியம் உயர்நிலைபள்ளி, கும்பகோணம் கல்லூரி, சென்னை மாகாணக் கல்லூரி ஆகியவற்றில் தமிழா ஆசிரியராக இருந்தவர். கலித்தொகையைத் தாம் ஆராய்ந்த குறிப்புக்களுடன் ஒரு பதிப்பும், களவழி நாற்பது ஒரு பதிப்பும் இவர் வெளியிட்டிருக்கிறார். களவழி நாற்பது பாடிய பொய்கையாரும் பொய்கை யாழ்வாரும் ஒருவரல்லர் என்பது இவர் கருத்து. மறைவு : 26-12-1931.

அனந்தாச்சார்லு (1843-1908) சென்னை மாகாணக் கல்லூரியில் கல்வி பயின்று, 1869 முதல் 1891 வரையில் சென்னையில் அட்வொக்கேட்டாக இருந்தார். காங்கிரசுக்கு அடிகோலிபவர்களில் இவர் ஒருவர். 1885-ல் முதவாவது காங்கிரசுக் கூட்டம் பம்பாயில் நடைபெற்ற பொழுது, தென்னிந்தியாவிலிருந்து பிரதிநிதியாகச் சென்றிருந்தார். 1895-ல் நாகபுரியில் நடந்த காங்கிரசுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். நாவன்மை படைத்த நாட்டுத் தலைவர்களில் ஒருவர். மறைவு : 28-11-1908

அனவரத விநாயகம் பிள்ளை, சு. (1877- 1940]: இவர் தந்தை சுப்பிரமணியபிள்ளை; தாயார் ஈசுவர வடிவு அம்மாள்.

சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் தத்துவப்பாடம் படித்து, பி.ஏ-ல் முதல்வராகத் தேர்ச்சி பெற்றார். எம்.ஏ-ல் தமிழ்ப்படித்து நச்கினார்க்கினியரைப்பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினார். கிறிஸ்தவக் கல்லூரியில் முதலில் டியூட்டராகவும், பிறகு உள்நாட்டு மொழிகட்கு மேற்பார்வையாளராகயும், (Superin tendent of Vernaculat Studies) பல ஆண்டுகள் வேலை பார்த்தார். கொழும்புப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும், சென்னைப் பல்கலைக் கழகத்துத் ‘தமிழ் லெச்சிகன்’ உறுப்பினராகவும், தமிழாராய்ச்சியாளராகவும் இருந்தார். இவர் இயற்-