பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அனேதா

284

அனோனேசீ


அனேதா (Agnatha) முதுகுத்தண்டுள்ள பிராணிகளில் ஒரு வகுப்பு. தாடையில்லா தவை என்று பொருள்படும். இக்காலத்தில் இதைச் சேர்ந்த இனங்கள் மிகச் சிலவே உள்ளன. அவற்றிற்குச் சைக்ளோஸ்டோமேற்றா (Cyclostomata) அதாவது வட்டவாயின என்று பெயர். இவை நீர்வாழ்வன. பல பண்புகளிலே மீன் போன்றவை. ஆயினும் இவற்றிற்குத் தாடையில்லை. மற்ற எல்லா முதுகுத்தண்டுப் பிராணிகளுக்கும் பொதுவாக உள்ள இணைத்துடுப்புக்கள், அல்லது இணைக்கைகால்கள் இவற்றிற்கு இல்லை. சிலவற்றிற்கு இணைத்துடுப்பு ஒரு ஜதை இருக்கலாம். முதுகுத்தண்டுப் பிராணிகளின் பாசில்களாகக் கிடைத்திருப்பவற்றில் வரையில் மிகப் பழமையானவை இவற்றினுடையவே. இந்தப் பாசில் பிராணிகள் ஆஸ்ட்ர கோடெர்ம்கள் எனப்படும். இவை 35 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சைலூரியன், ஆர்டொவீசியன் காலங்களிலே வாழ்ந்தவை. முதுகுத் தண்டுப் பிராணிகளெல்லாம் இவற்றினின்றும் வழி வழியாக வந்தவை என்று கருதப்படுகின்றன. இவற்றைத் தாடையில்லாதவை என்று குறிப்பிடுவதுபோல, தாடையுள்ள மற்ற எல்லா முதுகுத் தண்டுப் பிராணிகளையும் ஒன்றாகச் சேர்த்து தோஸ்டோமேற்றா (Gnathostomata) தாடைவாய்ப் பிராணிகள் என்று சொல்வதுண்டு.

அனோபிலிஸ் (Anopheles) ஒரு சாதிக் கொசு. இதில் ஏறக்குறைய இருநூறு இனங்கள் இருக்கின்றன.

அனோபிலிஸ்
C கியூலெக்ஸ்
A அனோபிலிஸ்
1. முட்டை
2. லார்வா
3. பியூப்பா
4. கொசு.

இவற்றில் முப்பது நாற்பது வகைகள் நோய்களைப் பரப்புகின்றன. மலேரியா நோய் பெண் அனோபிலிஸால் மனிதனிடமிருந்து மனிதனுக்குப் பரவுகிறது. இந்தியாவில் சாதாரணமாக இருக்கும் கியூலெக்ஸ் கொசுவுக்கும் அனோபிலிஸ் கொசுவுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. கியூலெக்ஸ் முட்டைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு தெப்பம்போல நீர்மேல் மிதக்கும். அனோபிலிஸ் முட்டைகள் தனித்தனியாக மிதக்கும். ஒவ்வொரு முட்டையின் நடுவிலும் இரு பக்கங்களிலும் காற்றறைகள் உண்டு. மிதவையாகப் பயன்படுகின்றன. கியூலெக்ஸின் லார்வா மூச்சு விடுவதற்காக நீர்மட்டத்திற்கு வந்தால் அந்த மட்டத்திற்குச் சாய்வான ஒரு கோணத்தில் தொங்கும். அனோபிலிஸ் லார்வா நீர்மட்டத்திற்குக் கீழே ஒரு போகாகக் கிடக்கும். கியூலெக்ஸின் பியூப்பா மூச்சுவிட வரும்போது அதன் தலையும் உடலும் நீர் மட்டத்திற்குச் செங்குத்தாக இருக்கும்படி நிற்கும். அனோபிலிஸ் பியூப்பாவின் தலையும் உடலும் சற்றுச் சாய்ந்து நிற்கும். கியூலெக்ஸ் உட்கார்ந்திருக்கும் கொசு போது தலையின் அச்சும் உடலச்சும் சேருமிடம் கூன்போல வளைந்திருக்கும். அனோபிலிஸ் தலையும் உடலும் ஒரே நேர் கோட்டில் இருக்கும். பார்க்க : கொசு, மலேரியா.

அனோனேசீ (Anonaceae ): சீத்தாக் குடும்பம் இரட்டை விதையிலையுள்ள மரங்கள், குற்றுச் செடிகள் கொடிகள், இலைகள் மாறொழுங்கின, தனி, முழு வடிவின இலையடிச் செதிலில்லாதவை பூக்கள் பெரும்பாலும் இரு பால் உள்ளவை. இதழ்கள் வட்டத்திற்கு மூன்றாக இருக்கும். புல்லி மூன்று. அல்லி பெரும்பாலும் ஆறு ; இரண்டு வட்டமாக அமைந்திருக்கும். இதழ்கள் சற்றுத் சற்றுத்தடித்தவை. பசுமை அல்லது பழுப்பு நிறமுள்ளவை. பகட்டாக இருப்பதில்லை. மகரந்தக் கேசரங்கள் பல. கேசரத் தாள் சிறியது. மகரந்தப் பையில் அறைகளைச் சேர்க்கும் இணைப்பு அறைகளுக்கு மேலே நீண்டு வளர்ந்திருக்கும். சூலகத்தில் பல சூலிலைகள் உண்டு. சூலறைபிரிந்தது(Apocarpous) சீத்தாப் போன்றவற்றில் சூலறை இணைந்ததாக (Syncarpous) இருக்கும். ஒரு பூத்திரள்கனி (Aggregate fruit). சிலவற்றில் உலர்கனியாகவும் சிலவற்றில் சதைக் கனியாகவும் இருக்கும்.

இது ஒரு முக்கியமான குடும்பம். பெரும்பாலும் அயன மண்டலத்தில் வளர்வது. சுமார் எண்ணூறு இனங்கள் இருக்கின்றன. பழத்துக்காகவும், வாசனைப் பொருள்களுக்காகவும், அழகுக்காகவும் சில வகைகள் பயிர் செய்யப்படுகின்றன. சீத்தாப்பழம்போன்ற சில மிகுந்த சுவையுடையவை. இந்தியா, மலேயா, பிலிப்பீன், கிழக்கிந்தியத் தீவுகள், அயன அமெரிக்கா முதலிய இடங்