பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/36

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



கலைக் களஞ்சியம்


தமிழ்‌ நெடுங்‌ கணக்கில்‌ முதல்‌ எழுத்து. “எழுத்தெனப்படுப அகர முதல் னகர இறுவாய்” என்று தொடங்குகிறது தொல்காப்பியம்‌ ; “அகர முதல எழுத்‌தெல்லாம்‌” என்று தொடங்குகிறது திருக்குறள்‌ ; இந்திய நாட்டுப்‌ பிறமொழிகளிலும்‌ இதுவே முதலில்‌ வரும்‌ எழுத்தாம்‌.

வடிவம்‌ : இந்த எழுத்தின்‌ வடிவம்‌ வளர்ந்த வரலாற்றைக்‌ கீழே காணலாம்‌ :.

இந்தக்‌ கோல்‌ எழுத்தினை விரைவாக ஓலையில்‌ எழுதி வந்தபோது வட்டெழுத்து வடிவம்‌ தோன்றியது என்பர்‌. பாண்டிய நாட்டிலும்‌ மலையாள நாட்டிலும் வட்டெழுத்து வழங்கியது. வட்டெழுத்தில்‌ அகரத்தின்‌. வடிவம்‌ கீழ்க்கண்டவாறு மாறி வந்துள்ளது.

ஒலி : அகரத்தினை எழுத்தாகக்‌ கூறும்போது சாரியையைச்‌ சேர்த்து அகரம்‌, அகாரம்‌, அஃகான்‌ என்று வழங்கியதாக இலக்கண நூல்களிலிருந்து அறிகிறோம்‌. அ—னா என்று வழங்குவதனை இன்றும்‌ கேட்கிறோம்‌. குழந்தைகள்‌ எழுத்துக்களைப்‌ பாட்டோசையாகப்‌ பாடும்‌ போது அ-ஆனா என வழங்குவதனையும்‌ காண்கிறோம்‌.

அ என்ற ஒலியை a என அனைத்து நாட்டு ஒலி நூலோரும்‌ எழுதிக்‌ காட்டுவர்‌. நாவினைப்‌ படுக்கவைத்து. வாயினைத்‌ திறந்ததும்‌ ஒலி அ என வெளிவருகிறது. ஆதலின்‌ இதை அடிப்படை ஒலி என்பர்‌ பரிமேலழகர்‌. வாயினையும்‌ நாவினையும்‌ பலவகையில்‌ மாற்றுவதால்‌ இந்த ஒலியே பலவகை எழுத்துக்களாக மாறுகின்றது ; “கடவுள்‌ எங்கும்‌ நிறைக்திருப்பதுபோல எல்லா எழுத்‌துக்களிலும்‌ அகரம்‌ உண்டு” என்பர்‌ நச்சினார்க்கினியர்‌. தனி மெய்யெழுத்துக்களை 'இக்‌' 'இங்‌' என்று இப்‌போது ஓதுவதுபோன்று அல்லாமல்‌ அகரம்‌ சேர்த்தே க, ங என முன்னாளில்‌ வழங்‌கிவந்தனர்‌.

அ என்ற ஒலி, எடுத்துச்‌ சொல்லப்பெறாதபோது நெகிழ்ந்துபோய்ப்‌ பலவகையாக மாறும்‌. தமிழ்ச்‌ சொற்‌றொடரில்‌ எழுவாயிலேயே பால்‌ விளங்‌கிவிடுவதால்‌