பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/450

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆர்க்காடுகிழார் மகனார்...

402

ஆர்க்கிடு

நீரைப்பெற்றுக் கால்வாய்களின் உதவியால் பாசனத்திற்குப் பயன்படுத்துகிறார்கள். இம்மாவட்டத்தில் கிணற்றுப் பாசனமும் அதிகம். இம்மாவட்டத்தில் குருந்தமும் அப்பிரகமும் கிடைக்கின்றன. குப்பம் என்னும் இடத்தினருகே முன்னர்த் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டு வந்தது.

வட ஆர்க்காடு

குடியாத்தம், பேரணாம்பட்டு, ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய இடங்களில் தோல் பதனிடும் தொழிலும், ஆரணியிலும் செய்யாற்றிலும் பட்டு நெசவுத்தொழிலும், வாலாஜாப்பேட்டையில் துணிகளில் அச்சடிக்கும் தொழிலும் நடைபெறுகின்றன. திருவண்ணாமலையும் சோளிங்கபுரமும் புண்ணிய ஸ்தலங்கள். மாமண்டூரில் ஜோலார்ப் அழகிய சமணச் சிற்பங்கள் உள்ளன. பேட்டை, காட்டுப்பாடி, அரக்கோணம் முக்கியமான ரெயில் சந்திப்புக்கள். 4.648 ச. மைல். இம்மாவட்டத்தின் பரப்பு : மக் : 28,59,157 (1951).

ஆர்க்காடுகிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார் : கடைச்சங்கம் மருவிய புலவர் (அகம்.64).

ஆர்க்கிடு: இது ஆர்க்கிடேசீ என்னும் மிகப்

யூலோபியா தரை ஆர்க்கிடு
முழுச்செடி: வேர்களும் பொய்க்கிழங்கும். 1. பூ. 2. புறவிதழ்களும் அகளிதழ்களும். 3. உதட்டிதழும் தம்பமும், பக்கப் பார்வை. 4. தம்பம் முன்பார்வை . 5. கேசரம். 6. மகரந்தத் திரள்கள். 7. கனி.8. கனியின் குறுக்கு வெட்டு.

பெரிய ஒற்றை விதையிலைக் குடும்பத்துச் செடிகளுக்குப் பொதுப் பெயர். இந்தச் செடிகளைத் தோட்டங்களில் மிகவும் அருமையாக வைத்து வளர்க்கின்றனர். இவற்றின் பூ விசித்திர அழகும் வினோத உயிரியற் சிறப்பும் உள்ளது. பலவகைகள் நறுமணமுள்ளவை. ஆர்க்கிடுகள் எல்லாம் சிறு செடிகள். ஆயினும் பல பருவங்கள் வரை தொடர்ந்து வாழ்பவை. மட்டத்தண்டுக் கிழங்கு முதலிய உறுப்புக்களின் உதவியினாலே இவற்றின் ஆயுள் நீடித்திருக்கும். பழைய தண்டுக்கிளை மடிந்து போனாலும், அடுத்த பருவத்தில் புதிய தண்டு கிழங்கிலிருந்து முளைத்தெழும். இவை வளரும் விதமும் பலதிறப்பட்டது. சில நிலத்தின் மேல் வளரும் தரையார்க்கிடுகள். பல மரங்களின்மேல் தொற்றுச் செடிகளாக இருக்கும் தொற்றார்க்கிடுகள். இவை வெப்பவலயத் தாவரங்களில் சிறப்பான ஒரு பகுதி, மற்றுஞ் சில மட்கியழுகும் பொருளிலே வளரும். நிலத்திலும் மரத்தின்மீதும் வளர்பவைகளுள் பாலைச்செடித் தன்மையுள்ளவை. அவற்றில் கணுவிடைகள் பருத்துப் போலிக்கிழங்குகள் (Pseudo bulb) ஆகும். இந்தப் போலிக் கிழங்குகளில் நீர் சேமித்து வைக்கப்படும். மற்றுஞ் சிலவற்றில் இலையே நீரைச் சேர்த்து வைத்துக் கொள்ளும். அம்மாதிரி இலை தடிப்பாக இருக்கும். அயனமண்டலத்தில் பல பல வகையான தொற்றார்க்கிடுகள் மிகுதியாக வளர்கின்றன.

வாண்டா
தொற்று ஆர்க்கிடு

அவற்றின் அமைப்பைக் கவனித்தால் மிகுந்த சுவையுடையதாக இருக்கும். அவற்றின் தண்டுகளிலிருந்து புதிதாகத் தோன்றும் வேர்களினாலே அவை மரத்தில் தொற்றிக் கொண்டிருக்கும். இந்தத் தொற்று வேர்களிலிருந்து உறிஞ்சு வேர்கள் புறப்படும். இந்த உறிஞ்சு வேர்கள் தொற்று வேர்களுக்கும் மரத்துக்கும் இடையே சேரும் இலை முதலியவற்றின் மட்குக்கு உள்ளே நுழைந்து நீர் முதலியவற்றைச் சேகரிக்கும். இவை தொற்று ஆர்க்கிடுயன்றி இன்னும் ஒருவித வேர் இவற்றிற்குண்டு. அது இந்த காற்றில் தொங்கிக்கொண்டிருக்கும் விழுது. இந்த விழுதைச் சுற்றிலும் கடற் பஞ்சு போன்ற உறை வளர்கின்றது. இதில் உள்ளீடில்லாத அணுக்கள் பல அடுக்குக்களாக இருக்கும். இந்த உறைக்குப் போர்வை அல்லது வெலாமென் (Velamen) என்று பெயர். இது மேலே விழும் நீரை விரைவில் மையுறிஞ்சுதாள் போல உள்ளிழுத்துக் கொள்ளும். காற்றில் ஆவியாக இருக்கும் நீரையும் இது கிரகித்துக்கொள்ளும் அமைப்புள்ளது. வெலாமென் உறைக்கு அடியிலிருக்கும் திசு பச்சையாக இருக்கும். அதில் ஒளிச் சேர்க்கை நடக்கும். இந்த வேரை நனைத்துப் பார்த்தால் பச்சை நிறம் நன்றாகக் காணும்.

பூ வளர்நுனி மஞ்சரியாகப் பெரும்பாலும் கதிராகவே உண்டாகும். ஒற்றை விதையிலை வகுப்பின் அமைப்புள்ளது. மூன்றடுக்கு வட்டமுறையுள்ளதாயினும் சில பாகங்கள் உண்டாவதில்லை; சில ஒன்று சேர்ந்து கொள்ளும். சில அளவு கடந்து வளரும். இவ்வாறு வியக்கத்தக்க பல வேறுபாடுகள் இந்தப் பூக்களில் காணும். இதழ்கள் எல்லாம் அல்லியிதழ்கள் போலவே இருக்கும். ஆறு இதழ்கள் இரண்டு வட்டமாக, ஒரு