பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகம்

14

அகமத்நகர்

தைப் பொறுத்தே அவர்கள் கல்லூரி வேலை வெற்றி பெறுவது என்று கூறினர். இரண்டாவது சோதனையில்தான் அவர்களுடைய நம்பிக்கை மிகுதியாகக் காணப்பட்டது. அதற்குக் காரணம் இரண்டாவது சோதனையில்தான் அகம் ஈடுபட்டிருந்தது. ஆகவே அகம் தொடர்புடைமை மிகுந்திருந்தபோதே நம்பிக்கையும் வெற்றியும் மிகுந்திருந்தன.

மார்க்ஸ் என்பவர் நீக்ரோக்களிடம் அவர்களுடைய நண்பர்களுடைய நிறத்தைப் பற்றிக் கூறுமாறு கேட்டார். இந்தச்சோதனையிலும் அகம் ஈடுபடலாயிற்று. அதனால் அதிகக் கறுப்பு நிறம் குறைந்த நீக்ரோ கறுப்பு நிறம் மிகுந்தவரால் அழகான நிறமுடையயராகவும் கறுப்பு நிறம் குறைந்தவரால் கறுப்பு நிறமுடையவராகவும் மதிக்கப்பட்டனர். ஆகவே நிறமானது ஊனக் கண்ணால் மட்டும் காணப்படவில்லை. அகக் கண்ணாலும் காணப்பட்டதாகும்.

வெற்றி நுகர்ச்சியும் சமுக மதிப்பும் ஒருவர் செய்யும் வேலையின் அளவையும் தன்மையும் பெருக்கும் என்பதை அறிஞர்கள் ஆராய்ச்சி வாயிலாகக் கண்டுளர். செய்து முடிக்கவேண்டும் என்ற அவா உந்துமாயின் வெற்றி பெறுவோம்; ஒரு செயலில் வெற்றி பெற்றால் மற்றச் செயல்களிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் செய்வோம். தொடக்கத்திலேயே தோல்வியுற்றால், செய்ய முடியாது என்ற தாழ்வுணர்ச்சிக் கொட்டம் உண்டாய்விடும். அதனால் ஒருவனுடைய அறிவுத்திறனைச் சோதிக்கும்போது, தொடக்கத்தில் எளிய செயல்களைத் தந்து அதில் அவன் அடையும் வெற்றியைப் புகழ வேண்டும். அப்படிச் செய்தால் அவன் பின்னர் கடினமான செயல்களையும் வெற்றிகரமாகச் செய்வதற்கான நம்பிக்கைப் பெற்றுவிடுவான். இவ்வுண்மையை ஆட்வர் என்பவர் பல சோதனைகள் வாயிலாகக் காட்டியுளார்.

தொழில் நிலையங்களில் வேலை செய்பவாிடம் மிகுதியாகக் கூலிபெற வேண்டுமென்ற ஆசையைவிடத் தம்முடைய வேலையைப் பிறா் மெச்ச வேண்டும் என்ற ஆசையே அவா்களிடம் மிகுந்திருக்கிறது. ஆகவே அகம்-திருப்தியுறுதல் என்பது வேலையின் வெற்றிக்கு மிகுந்த ஆற்றலுடைய தூண்டுகோலாக இருந்து வருகிறது. எத்தகைய நிலைமையில் அகம்-தாெடா்புடைமையும், எத்தகைய நிலைமையில் அகம்-திருப்தியுறுதலும் ஏற்படுகின்றன என்பதை இத்தகைய சாேதனைகள் தெளிவாக்குகின்றன. இவை அகம் என்று ஒன்று இருப்பதாக உறுதி செய்வதாகக் கூறலாம்.

ஆனால் அகம் என்பதன் இலக்கணமும் பண்பும் யாவை என்று கேட்டால் அப்பாேது நாம் ஒன்றும் கூறமுடியாத நிலையிலிருக்கிறாேம். அகம் என்பது அளுமையின் ஓா் அம்சம் மட்டுமே என்று பிராய்டு, காப்கா, லெவின், ஆல்பாோ்ட் ஆகியாோ் கூறுகிறாா்கள். உயா்நிலையான நுகா்ச்சிகள் நனவுக்கு எட்டுவதில்லை என்று மனாேவசிய நிலையும் உளப்பாகுபாட்டியலும் காட்டுகின்றன.

அத்துடன் அகம் என்பது குழவிப் பருவத்தில் காணப்படாமல் நாளடைவிலேயே பாிணமிக்கிறது என்னும் உண்மையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக அகம் இருப்பதாக உள்ள உணர்ச்சியும் காலத்துக்குக் காலமும் சந்தர்பத்துக்குச் சந்தர்ப்பமும் மாறி வருகின்றது.

அகவே அகம் பற்றிய கருத்துச் சிறிது சிறிதாக மாறி வந்திருகின்றது. பண்டைக்கால முதல் இருந்து வரும் கொள்கையும் புதியதாக தோன்றிய இம்மை நிலைக் கொள்கையும் சேர்ந்து 19 ஆம் நுாற்றண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் அகம் என்னும் கருத்தை ஏற்றுக் கொள்ளதிருந்தன. ஆனால் பிராய்டு, ஆட்லா், லெவின், ஆல்பாோ்ட் செய்த ஆராய்ச்சிகள் அகம் என்பதன் தன்மையை அறிவதற்கு பெருந்துணையாக வுள்ளன. ஆயினும் மூவாயிரம் ஆண்டுகள் சிந்தித்தும் அண்மையில் சோதனை செய்தும் கூட இன்னும் நாம் யாஞ்ஞவல்கியரையும் புத்தரையும்விட மிகுதியாக எதுவும் கண்டுவிடவில்லை என்று கூறவேண்டிய நிலைமையிலேயே இருக்கின்றோம். பி. கு

அகம்பல்மால் ஆதனார் கடைச்சங்க காலப் புலவர். ஆதன் என்பது இவருடைய இயற்பெயர் இவர் முல்லைத்திணையைப் பாடி இருக்கிறார். (நற்றினை 81).

அகமத்நகர் பம்பாய் இராச்சியத்தில் உள்ள ஓர் ஊருக்கும் மாவட்டத்துக்கும் பெயராகும். ஊர்: சீனா நதியின் இடது கரையில் உள்ளது; மக்; 54,193 (1941). இதை அகமத் நைஜாம்ஷா 1494 -ல் நிறுவினான். இது 1803 -ல் மகாராஷ்டிரருக்குக் கிடைத்தது. 1806-ல் பிரிட்டிஷார் வசமாயிற்று. இது ராணுவத்தலம். முக்கியமான கைத்தொழிற் பொருள்கள் பருத்தி உடையும் பட்டுடையும், பித்தளை செப்புக் கலங்களுமாம். மாவட்டம் : மழை குறைந்த பகுதி. பருத்தி, துவரை, கோதுமை, சாயப் பொருள்கள் முக்கியப் பயிர்கள், மக் 1.142.229(1941).

வரலாறு : தக்காணத்தில் நைஜாம் ஷாகி வமிசத்தை நிறுவிய அகமத் நைஜாம் ஷாகி 1494-ல் உண்டாக்கிய நகரம். அவன் தனது தலைநகரை ஜன்னாரிலிருந்து இங்கு மாற்றிக்கொண்டான். அவன் 1499-ல் தௌலதாபாத்தைக் கைப்பற்றினான். அகமதீன் மகன் 1-ம் பா்ஹான் (ஆ. கா. 1509-53) காலத்தில் 1510 -ல் அகமத் நகர்மீது பேரார் படையெடுத்தது, ஆனால் முறியடிக்கப்பட்டது. 1-ம் பர்ஹால் பிஜாப்பூரைச் சார்ந்த இஸ்மேல் அடில்ல்ஷாவின் சகோதரியை மணந்து கொண்டான். ஆயினும் 1525-ல் பேராரும் பீடாரும் பிஜாப்பூரைத் தாக்கியபோது அகமத்நகரும் சோ்நது பிஜாப்பூரைத் தாக்கிற்று. 1531 அகமத்நகர் பிஜாப்பூரால் தோற்கடிக்கப்பட்டது. பிஜாப்பூரோடு போாிட்டு 1531-ல் கைபற்றிய ஷோலாப்பூரை 1-ம் பா்ஹான் 1542-ல் கைவிட வேண்டியதாயிற்று. 1552-ல் விஜய நகர மன்னனின் உதவியைக்கொண்டு ஷொலாப்பூரை மறுபடியும் கைப்பற்ற முடிந்தது. 1-ம் பர்ஹான் காலத்தில் அகமத்நகாில் மிகப் பொிய பீரங்கி ஒன்று செய்யப்பட்டது, அதன் எடை 40 டன்.

1-ம் பர்ஹானுக்குப்பின் 1-ம் உசேன் (ஆ.கா. 1553-65) அகமத்நகரை ஆண்டான். 1558-59-ல் இவன் விஜயநகர மன்னனான ராமராயரால் தோற்கடிக்கப்பட்டான். 1563-ல் மறுபடியும் விஜயநகரப் படைகள் அகமத்நகரை ஆக்கிரமித்துப் பல கொடுமைகளை யிழத்தன. 1564-ல் அகமத்நகர் மற்றத் தக்காண இராச்சியங்களோடு கலந்து விஜயநகரத்தைத் தாக்கத் தீா்மானித்தது. 1565-ல் தலைக்கோட்டைப் போரில் முஸ்லிம் இராச்சியங்கள் விஜயநகரை வென்று வஞ்சம் தீா்த்துக்கொண்டன. அவ்வாண்டில் 1-ம் உசேன் இறந்தான்.

1-ம் உசேனுக்குப் பிறகு அவன் மகன் 1-ம் முர்த்தாசா (ஆ. கா. 1566-1588) அரசாண்டான். இவன் காலத்தில் போர்ச்சுகேசியரோடு நடந்த தகராறில் போர்ச்சுகேசியரே வென்றனர். 1588-ல் பிஜாப்பூரைத் தாக்க முயன்றது கைகூடவில்லை. 1588-ல் முர்த்தாசா தன் மகனைக் கொல்ல முயன்று அவனால் கொல்லப்பட்-